பதிவு செய்த நாள்
21 ஏப்2017
23:52

சென்னை : அசோக் லேலாண்டு நிறுவனம், அதன் நவீன தொழில்நுட்பத்தை பறைசாற்றும் விதமாக, சென்னையில் மூன்று நாள் சர்வதேச கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. அதை, அந்நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் தலைவர் வினோத் தாசரி துவங்கி வைத்தார்.
நாட்டில், இரண்டாவது பெரிய வர்த்தக வாகன உற்பத்தி நிறுவனமான, அசோக் லேலாண்டு நிறுவனம், அதன் முன்னேறிய தொழில்நுட்பம் மற்றும் பி.எஸ்.,–4 விதிகளுக்கு ஏற்ற, ‘ஐ.இ.ஜி.ஆர்.,’ எனும் புதிய தொழில்நுட்பத்தில், வாகனங்களை தயாரித்து வருகிறது. இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் ஒரே உள்நாட்டு நிறுவனம் அசோக் லேலாண்டு மட்டுமே ஆகும். மேலும், இது, இந்தியா போன்ற நாடுகளில் உள்ள சாலைகளின் தன்மைக்கு ஏற்ற தொழில்நுட்பம் ஆகும்.
இத்தொழில்நுட்பத்தில் தயாரான வாகனங்கள் உள்ளிட்ட அந்நிறுவனத்தின் பல்வேறு நவீன தயாரிப்புகள் அடங்கிய மூன்று நாள் கண்காட்சி, சென்னையில் நேற்று துவங்கியது. இக்கண்காட்சியை பார்வையிட உலகெங்கிலும் இருந்து, வாகன டீலர்கள் வந்துள்ளனர்.
அதை துவங்கி வைத்து வினோத் தாசரி பேசும்போது, ‘எங்கள் நிறுவனம், வாகன உற்பத்தி துறையில் பல்வேறு விதங்களில், முன்னோடியாக விளங்குகிறது. எங்களது, ஐ.இ.ஜி.ஆர்., தொழில்நுட்பத்தின் தயாரிப்புகள், எதிர்காலத்திற்கு தேவையான வாகனங்களை தயாரிப்பதில், நாங்கள் முன்னணியில் இருப்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்’ என்றார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|