பதிவு செய்த நாள்
21 ஏப்2017
23:53

மும்பை : பஞ்சாபில், பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின், 200க்கும் மேற்பட்ட துணை முகவர்கள், புதிய, ‘பாரத் ஸ்டேஜ் – 4’ விதிமுறையால், தேங்கியுள்ள இருசக்கர வாகனங்களுக்கு, நஷ்ட ஈடு கேட்டு, மூன்றாவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த, 5ம் தேதி, பஜாஜ் நிறுவனம், பழைய, ‘பாரத் ஸ்டேஜ் – 3’ விதிமுறைப்படி தயாரிக்கப்பட்ட வாகனங்களை திரும்ப பெற்றுக் கொள்வதாக உறுதியளித்து இருந்தது. அதன்படி நடக்காததால், துணை முகவர்கள், ஏப்., 18 முதல், கடைகளை அடைத்துவிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், இத்தகவலை, இந்நிறுவனம் மறுத்துள்ளது.
இது குறித்து, பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின், மோட்டார் சைக்கிள் வணிகத்தின் தலைவர் எரிக் வாஸ் கூறுகையில், ‘‘துணை முகவர்கள் போராட்டம் நடத்துவதாக, வெளியான தகவல் வெறும் வதந்தியே. பிரதான முகவர்களிடம் எந்தவொரு பிரச்னையும் இல்லை. ஒருசில, துணை முகவர்களிடம் பிரச்னை இருக்கலாம்,’’ என்றார்.
கடந்த மாதம், சுப்ரீம் கோர்ட், ‘பாரத் ஸ்டேஜ் – 3’ வாகனங்களை, ஏப்., 1 முதல் விற்பனை செய்ய, தடை விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில், வட்டார போக்குவரத்து அலுவலகங்களில், பாரத் ஸ்டேஜ் குறித்த தெளிவான வழிகாட்டுதல்கள் இல்லாத காரணத்தினால், கடந்த, 17ம் தேதியிலிருந்து, பல நிறுவனங்களின் வாகனங்கள் பதிவு செய்வது நிறுத்தப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|