பதிவு செய்த நாள்
21 ஏப்2017
23:54

புதுடில்லி : ‘‘புதிய தலைவர்களின் நிலையற்ற கொள்கைகள், உலக பொருளாதாரத்தை அசைக்கக் கூடிய வகையில் உள்ளன’’ என, ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் எச்சரித்துள்ளார்.
அவர், சி.என்.பி.சி., சேனலுக்கு அளித்துள்ள பேட்டி: உலக நாடுகளில், புதிய தலைவர்கள் பலர் உருவெடுத்து உள்ளனர். அவர்கள், தங்களின் வலிமை குறித்து நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அதனால், புதுப்புது கொள்கைகளை அறிவிக்கின்றனர். இக்கொள்கைகளுக்கு எதிர்ப்பு எழுந்தால், அவற்றை திரும்பப் பெறவும் அவர்கள் தயங்க மாட்டார்கள். இத்தகைய சூழல், உலக பொருளாதார வளர்ச்சியில் ஏற்ற, இறக்கத்தை உண்டு பண்ணும். ஆனால், நல்லவேளையாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஏற்கனவே அறிவித்தவாறு, பாதுகாப்புரிமை கொள்கையை, முழுமையாக அமல்படுத்தாமல் உள்ளார். அதனால், அவர் அரசு குறித்து எழுந்த அச்சம் சற்று குறைந்துள்ளது. எனினும், அவர் எடுத்த ஒருசில கொள்கை முடிவுகள், சர்ச்சையை கிளப்பியுள்ளன.
அதே சமயம், மெக்சிகோவுக்கு எதிராக, டிரம்ப் தீவிர நடவடிக்கை எடுப்பார் என, எதிர்பார்க்கப்பட்டது. அது போல, சீனாவுக்கு எதிரான நடவடிக்கைகளும் கடுமையாக இருக்கும் என, அச்சம் நிலவியது. அப்படி எதுவும் நடக்கவில்லை என்பதே நல்ல செய்தி தான். டிரம்ப் அரசின் தற்போதைய கொள்கைகளில் தெளிவில்லை. அவை எப்படி செயல்படுத்தப்படும் என்பதும், அவற்றால் எதிர்பார்த்த பலன் கிடைக்குமா என்பது குறித்தும், ஊகிக்க முடியாத நிலை உள்ளது.
முதன்முறையாக, வளர்ந்த நாடுகளுடன், ஒருசில வளரும் நாடுகளும் போட்டி போட்டுக் கொண்டு வேகமாக முன்னேறி வருகின்றன. அவற்றின் வர்த்தகம் சூடுபிடித்துஉள்ளது; முதலீடுகள் குவிவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|