பதிவு செய்த நாள்
21 ஏப்2017
23:55

மும்பை : ஹோண்டா மோட்டார் சைக்கிள் அண்டு ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம், கர்நாடகாவில், 1,000 கோடி ரூபாய் முதலீட்டில், இருசக்கர வாகனங்களை, ‘அசெம்பிள்’ செய்யும் ஆலையை அமைக்க உள்ளது.
உள்நாட்டில், இருசக்கர வாகன உற்பத்தி மற்றும் விற்பனையில், ஹோண்டா நிறுவனம் முன்னணியில் உள்ளது. இந்நிலையில் இந்நிறுவனம், இந்தியாவில், கூடுதலாக, 1,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் இந்தியாவுக்கான தலைவர் மினோரு காடோ கூறியதாவது: எங்கள் நிறுவனம், கர்நாடகாவில், இருசக்கர வாகனங்களை, ‘அசெம்பிள்’ செய்யும், நான்காவது ஆலையை அமைக்க உள்ளது. இது, இந்தியாவில், 11வது ஆலையாக திகழும். புதிய ஆலை, 1,000 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்பட இருக்கிறது. இங்கு, ஆறு லட்சம் வாகனங்கள் அசெம்பிள் செய்யப்படும். நான்கு புதிய மாடல்களில் வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. கடந்த நிதியாண்டில், நிறுவனத்தின் வருவாய், 20 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டியது. இது, அதற்கு முந்தைய ஆண்டில், 18 ஆயிரம் கோடி ரூபாயாக குறைந்திருந்தது. இதுவரை, இந்தியாவில், 7,800 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில், 50 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்த நிலையில், நடப்பாண்டில், 60 லட்சம் வாகனங்களை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளோம். ஹோண்டாவின் மொத்த வாகன விற்பனையில், ஸ்கூட்டர் பங்கு, 67 சதவீதம்; பைக் பங்கு, 15 சதவீதமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|