பதிவு செய்த நாள்
23 ஏப்2017
06:36

மும்பை, ஏப். 23–இருசக்கர வாகன உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ள, ராயல் என்பீல்டு நிறுவனம், பிரேசில் தலைநகர், சாவ் பாலோவில், அதன் முதல் துணை நிறுவனத்தை துவங்கியுள்ளது.இது குறித்து, இந்நிறுவனத்தின் தலைவர் ருத்ராதேஜ் சிங் கூறியதாவது:உலகின், நான்காவது மிகப்பெரிய மோட்டார் சைக்கிள் சந்தையாக, பிரேசில் விளங்குகிறது. இங்கு, நேரடியாக மோட்டார் சைக்கிள்களை வினியோகிக்க, ராயல் என்பீல்டு பிரேசில் நிறுவனம் அமைக்கப்பட்டு உள்ளது.இதன் மூலம், 535 சிசி பிரிவின் கீழ், ஒற்றை சிலிண்டர் இன்ஜின்களை கொண்ட, பிரபல மாடல்களான, ‘புல்லட் 500, கிளாசிக் 500 மற்றும் கான்டினென்டல் ஜி.டி., 535 சிசி’ இருசக்கர வாகனங்களை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளோம்.நிறுவனத்தின் ஆண்டு வளர்ச்சி விகிதம், கடந்த ஆறு ஆண்டுகளில், 50 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்து உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.ராயல் என்பீல்டு நிறுவனம், அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட, 50க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு, அதன் தயாரிப்புகளை விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|