பதிவு செய்த நாள்
25 ஏப்2017
01:12

ஐதராபாத் : ரிசர்வ் வங்கி அனுமதியுடன், இந்திய தபால் துறை, ‘பேமென்ட் பேங்க்’ என்ற சிறிய வங்கி சேவையில் ஈடுபட்டு வருகிறது. தற்போது, தபால் துறைக்கு, 978 தனிப்பட்ட, ஏ.டி.எம்., மையங்கள் உள்ளன. இந்நிலையில், தபால் துறை, நடப்பாண்டில், 650 வங்கி கிளைகளை துவக்க முடிவு செய்துள்ளது.
இது குறித்து, தபால் துறை செயலர் சுதாகர் கூறியதாவது: நாடு முழுவதும், தபால் துறை சார்பில், ஒரு மாவட்டத்தில், ஒரு வங்கி கிளை துவக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அந்த வங்கி, அம்மாவட்டத்தில் உள்ள, 1,200 முதல், 1,500 தபால் நிலையங்களுடன் இணைக்கப்படும். பேமென்ட்ஸ் வங்கியின் மூலம், அதிகளவில், ஏ.டி.எம்.,கள் அமைக்கப்பட உள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள், வங்கி சேவைகள், நவீன தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் ஒருங்கிணைக்கப்படும்.
கடந்த, 2016 – 17ல், விரைவு தபால் சேவை வாயிலாக கிடைத்த வருவாய், 1,740 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, முந்தைய ஆண்டில், 1,605 கோடி ரூபாயாக இருந்தது. 2015 – 16ல், தபால் துறையின் வருவாய், 13 ஆயிரம் கோடி ரூபாயாகவும்; செலவு, 19 ஆயிரம் கோடி ரூபாயாகவும் இருந்தது. அடுத்த இரு ஆண்டுகளுக்குள், வரவு – செலவு சரி செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|