பதிவு செய்த நாள்
25 ஏப்2017
01:13

மும்பை : டாடா மோட்டார்ஸ் நிறுவனம், ‘மார்கோபோலோ’ எனும் பிராண்டின் கீழ், மின்சாரத்தில் இயங்கும் பேருந்தை, சோதனை ரீதியில் வெற்றிகரமாக இயக்கி உள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் வர்த்தக வாகன பிரிவின் தலைமை அதிகாரி, ஏ.கே.ஜிண்டால் கூறியதாவது: ஹிமாச்சல பிரதேச சாலை போக்கு வரத்து கழகம் மற்றும் மாநில போக்கு வரத்து துறை அமைச்சகத்துடன் இணைந்து, கடந்த, 21ல், எங்களுடைய முதல் மின் பேருந்தை, சிம்லாவில், சோதனை ரீதியில் வெற்றிகரமாக இயக்கி உள்ளோம். முதல் சோதனை வெற்றிகரமாக அமைந்ததால், இரண்டாம் கட்டமாக, சிம்லாவின் நகர்ப்புறத்திலும் இயக்க உள்ளோம்.
ஒன்பது மீட்டர் அளவுள்ள மின் பேருந்தில், 31 பேர் அமரலாம். இப்பேருந்து பர்வனுா – கல்கா சாலையில், 160 கி.மீ., துாரம், எந்தவித கட்டணமும் இல்லாமல் இயக்கப்பட்டது. இந்த பேருந்தின் மதிப்பு, 1.6 கோடி ரூபாயாகும்.மேலும், ஹைபிரிட் எனப்படும், கலப்பின பேருந்துகள், டில்லி, நாக்பூர் மற்றும் சண்டிகரில், ‘டாடா ஸ்டார் பஸ்’ எனும் பிராண்டின் கீழ் சோதனைக்கு உட்படுத்தப்படும். இதன் விலை, 2 கோடி ரூபாய் ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|