பதிவு செய்த நாள்
25 ஏப்2017
01:13

மும்பை : ஐநாக்ஸ் நிறுவனம், சினிமா திரையரங்க பொழுது போக்கு துறையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், ஆண்டுக்கு கூடுதலாக, 50 திரையரங்கங்கள் அமைப்பதன் மூலம், அதிக வருவாய் ஈட்ட முடிவு செய்துள்ளது.
இது குறித்து, ஐநாக்ஸ் குழும நிறுவனங்களின் இயக்குனர் சித்தார்த் ஜெயின் கூறியதாவது: எங்கள் நிறுவனம், 58 நகரங்களில் உள்ள, 118 இடங்களில், 468 சினிமா திரையரங்கங்களை நிர்வகித்து வருகிறது. தற்போது, ஆண்டுக்கு கூடுதலாக, 50 திரையரங்கங்களை அமைக்க உள்ளது. ஒரு திரையரங்கம் அமைக்க, 2.50 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும். 2015 – 16ல், ஐநாக்சின் வருவாய், 1,332.69 கோடி ரூபாயாக இருந்தது. இது, அடுத்த மூன்று ஆண்டுகளில், 2,000 கோடி ரூபாயாக உயர்த்தப்படும்.
நிறுவனம், குர்கானில் செயல்பட்டு வந்த, சத்யம் சினிபிளக்சஸ் என்ற நிறுவனத்தை, 2014ல், 182 கோடி ரூபாய்க்கு கையகப்படுத்தியது. இதன் மூலம், வட மாநிலங்களில், அதிக வாடிக்கையாளர்கள் ஈர்க்கப்படுவர். நிறுவனத்தின் மொத்த டிக்கெட் விற்பனையில், 40 சதவீதம், இணையதளம் மூலம் விற்பனையாகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|