பதிவு செய்த நாள்
25 ஏப்2017
01:14

மெல்போர்ன் : நீண்ட காலத்திற்கு பின், இந்தியா, ஆஸ்திரேலியாவுக்கு, ‘அல்போன்சா, கேசர்’ உள்ளிட்ட மாம்பழங்களை, முதன்முறையாக, ஏற்றுமதி செய்ய உள்ளது.
மாம்பழ விளைச்சலில், ரசாயன கலப்பு, பூச்சி மருந்து உள்ளிட்ட, உயிரி பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பான விதிமுறைகளில், ஆஸி., அரசு செய்துள்ள சீர்திருத்தங்கள் காரணமாக, இந்திய மாம்பழங்களை, அந்நாட்டிற்கு ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பு கிட்டிஉள்ளது.
‘மாம்பழங்களை ஏற்றுமதி செய்வதற்கு முன், கதிரியக்க பரிசோதனை உட்பட, உயிரி பாதுகாப்பு நடைமுறைகளை, ஏற்றுமதி நிறுவனங்கள் பின்பற்ற வேண்டும்’ என, ஆஸ்திரேலிய மாம்பழ தொழில் கூட்டமைப்பின் தலைமை செயல் அதிகாரி ராபர்ட் கிரே தெரிவித்து உள்ளார். ‘‘முதற்கட்டமாக, விமானம் மூலம், அல்போன்சா, கேசர் வகை மாம்பழங்களை, ஆஸ்திரேலியாவிற்கு ஏற்றுமதி செய்ய திட்மிட்டு உள்ளோம்,’’ என, கே.பி., எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கவுஷல் கக்கர் கூறியுள்ளார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|