பதிவு செய்த நாள்
25 ஏப்2017
01:15

புதுடில்லி : இந்தாண்டு துவங்கி, நடப்பு, ஏப்., 21 நிலவரப்படி, மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளின், சிறு, நடுத்தர நிறுவனங்கள் பிரிவில், புதிய பங்கு வெளியீடுகள் மூலம், 514 கோடி ரூபாய் திரட்டப்பட்டு உள்ளது.
கடந்த, 2016ல், இப்பிரிவில், 66 நிறுவனங்கள், 540 கோடி ரூபாய் திரட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தாண்டு, 39 நிறுவனங்கள், புதிய பங்கு வெளியீடுகளை மேற்கொண்டன. அவற்றில், தேசிய பங்குச் சந்தையின், சிறிய, நடுத்தர நிறுவனங்கள் பிரிவில், 22 நிறுவனங்கள், பங்குகளை வெளியிட்டு, 365 கோடி ரூபாய் திரட்டிக் கொண்டன. மும்பை பங்குச் சந்தையின், சிறிய, நடுத்தர நிறுவனங்கள் பிரிவில், 17 நிறுவனங்கள், புதிய பங்கு வெளியீடுகள் மூலம், 149 கோடி ரூபாய் திரட்டியுள்ளன.
வர்த்தக விரிவாக்கம், நடைமுறை மூலதனம் போன்றவற்றுக்கான பங்கு வெளியீடுகள், அதிகளவில் மேற்கொள்ளப்படுகின்றன. மத்திய அரசின் சீர்திருத்தங்கள், ஊக்குவிப்பு சலுகைகள் போன்றவற்றால், சிறிய, நடுத்தர நிறுவனங்கள், பங்கு வெளியீடுகளில் இறங்குவது அதிகரித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|