பதிவு செய்த நாள்
25 ஏப்2017
18:31

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் கடந்த இருதினங்களாக நல்ல ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன. இன்று நிப்டி புதிய உச்சமாக 9,300 புள்ளிகளை கடந்து சாதனை படைத்தது. ரூபாயின் மதிப்பு இருதினங்களாக உயர்வுடன் இருப்பது, ஆசிய - ஐரோப்பிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட ஏற்றம் மற்றும் ரிலையன்ஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவன பங்குகள் உயர்வுடன் முடிந்தது போன்ற காரணங்களால் இன்றைய வர்த்தகம் உயர்வுடன் முடிந்தன.இன்றைய வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 287.40 புள்ளிகள் உயர்ந்து 29,943.24-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 88.65 புள்ளிகள் உயர்ந்து 9,306.60-ஆகவும் நிறைவுற்றன. சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 24 நிறுவன பங்குகள் உயர்ந்தும், 6 நிறுவன பங்குகள் சரிந்தும் முடிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|