பதிவு செய்த நாள்
26 ஏப்2017
04:11

புதுடில்லி : தென் கொரியாவைச் சேர்ந்த, எல்.ஜி., எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், நுகர்வோர் சாதனங்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் மொபைல் போன்கள், வாடிக்கையாளரிடம் அதிக வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில், இந்நிறுவனம், வாடிக்கையாளர் வாங்கும் வகையில், ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டு உள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:எங்கள் நிறுவனத்தின், வாஷிங் மிஷின், ‘ஏசி’ சாதனங்கள் விற்பனை சிறப்பாக உள்ளது. அதே போல், இந்திய மொபைல் சந்தையிலும், எல்.ஜி., முக்கியத்துவம் பெற திட்டமிட்டு உள்ளது. இதற்காக, வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில், குறைந்த விலையில், அதிநவீன தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய ஸ்மார்ட் போன்கள் அறிமுகம் செய்யப்படும். தீபாவளி பண்டிகையை மையமாக வைத்து, போன்கள் விற்பனை துவங்கும். தற்போது, நொய்டாவில் உள்ள தொழிற்சாலையில், மொபைல் போன்கள் உற்பத்தி நடைபெற்று வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|