பதிவு செய்த நாள்
26 ஏப்2017
04:11

புதுடில்லி : கொச்சின் ஷிப்யார்டு, பிரதாப் ஸ்நாக்ஸ், தேஜாஸ் நெட்வொர்க்ஸ் ஆகிய மூன்று நிறுவனங்கள், புதிய பங்குகளை வெளியிட்டு, மொத்தம், 2,300 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டு உள்ளன. இந்த பங்கு வெளியீடுகளுக்கு, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியமான, ‘செபி’ அனுமதி அளித்துள்ளது.
பொதுத் துறையைச் சேர்ந்த, கொச்சின் ஷிப்யார்டு, இந்தியாவின் மிகப்பெரிய கப்பல் கட்டும் நிறுவனமாகும். இந்நிறுவனம், பங்கு விற்பனை மூலம், 1,400 கோடி – 1,500 கோடி ரூபாய் திரட்டி, புதிய உலர் கூடம், சர்வதேச கப்பல் பழுது பார்ப்பு மையம் ஆகியவற்றை அமைக்க திட்டமிட்டு உள்ளது.
பிரதாப் ஸ்நாக்ஸ், ‘யெல்லோ டைமண்டு’ என்ற பிராண்டில், நொறுக்குத் தீனி வகைகளை விற்பனை செய்கிறது. இந்நிறுவனம், பங்கு விற்பனையில், 400 கோடி ரூபாய் திரட்டி, அதன் தொழிற்சாலையை நவீனமாக்கவும், பழைய கடன்களை திரும்பத் தரவும் திட்டமிட்டு உள்ளது. இணைய ஒருங்கிணைப்பு வசதிக்கான கண்ணாடியிழை கம்பிகள், சாதனங்கள் உள்ளிட்டவற்றை தயாரிக்கும் தேஜாஸ் நெட்வொர்க்ஸ் நிறுவனம், பங்கு வெளியீட்டின் மூலம், 450 கோடி ரூபாய் திரட்டும் என, தெரிகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|