பதிவு செய்த நாள்
26 ஏப்2017
04:12

சென்னை : இந்தியன் வங்கி, கடந்த நிதியாண்டில், 1,405 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டியுள்ளது.
மார்ச் 31ல் நிறைவடைந்த காலாண்டு முடிவுகளை, சென்னையில் உள்ள இந்தியன் வங்கியின் தலைமை அலுவலகத்தில், அதன் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் கிஷோர் காரத், நேற்று வெளியிட்டார்.
பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: வங்கியின் வளர்ச்சி சிறப்பாக இருந்து வருகிறது. நடுத்தர ரக வங்கிகளில், நாட்டிலேயே இந்தியன் வங்கி, சிறப்பான இடத்தை பிடித்து உள்ளது. அதுமட்டுமின்றி, பெரிய வங்கிகளுடன், போட்டி போடும் நிலையை எட்டியுள்ளது. வரும் நிதியாண்டில், இதை மேலும் மிகச் சிறந்த வங்கியாக மாற்ற உறுதி பூண்டிருக்கிறோம். நிதி விபரங்களை பொறுத்தவரை, 2016 – 17ன், கடைசி காலாண்டில், மொத்த வருவாய், 4,601.88 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு, இதே கால கட்டத்தில் அது, 4,512.18 கோடி ரூபாயாக இருந்தது. இது போல், நிகர வருவாயும், 1,664 கோடி ரூபாயில் இருந்து, 18.41 சதவீதம் அதிகரித்து, 1,970.29 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. மேலும், 319.70 கோடி ரூபாய் லாபம் ஈட்டிஉள்ளது.
கடந்த நிதியாண்டில், வங்கி, 18,251.12 கோடி ரூபாயை மொத்த வருவாயாக ஈட்டியுள்ளது. நிகர வருவாய், 6,227.61 கோடி ரூபாயில் இருந்து, 7,357.43 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. வங்கியின் நிகர லாபம், 711.38 கோடி ரூபாயில் இருந்து, 1,405.68 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். அப்போது, நிர்வாக இயக்குனர்கள், எம்.கே.பட்டாச்சார்யா, ஏ.எஸ்.ராஜிவ் ஆகியோர் உடன் இருந்தனர்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|