பதிவு செய்த நாள்
26 ஏப்2017
04:12

புதுடில்லி : பி.எஸ்.இ., எனப்படும், மும்பை பங்குச் சந்தை வெளியிட்டுள்ள அறிக்கை: வரும், 28ம் தேதி, அக் ஷய திருதியை தினத்தன்று, கோல்டு இ.டி.எப்., – எஸ்.ஜி.பி., ஆகியவை மீதான வர்த்தக நேரம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.அன்று, வழக்கம் போல, பங்கு வர்த்தகம், காலை, 9:00 மணிக்கு துவங்கி, மாலை, 3:30 மணிக்கு முடிவடையும். அக் ஷய திருதியை முன்னிட்டு, கோல்டு இ.டி.எப்., மற்றும் எஸ்.ஜி.பி., ஆகியவற்றின் மீதான வர்த்தகம், மீண்டும் மாலை, 4:30 மணிக்கு துவங்கி, இரவு, 7:00 மணி வரை நடைபெறும்.
இதன்படி, ஆக்சிஸ் எம்.எப்., – எச்.டி.எப்.சி., எம்.எப்., – ஐ.டி.பி.ஐ., எம்.எப்., – ரிலையன்ஸ் எம்.எப்., – குவாண்டம் ரெலிகேர் எம்.எப்., – கோடக் எம்.எப்., மற்றும் பிர்லா சன்லைப் எம்.எப்., நிறுவனங்களின் கோல்டு இ.டி.எப்., திட்டங்களில், வர்த்தகம் நடைபெறும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள், கோல்டு இ.டி.எப்., திட்டங்களை நிர்வகிக்கின்றன. இதில், தங்கத்தை யூனிட்களாக வாங்கலாம்.அது போல, பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள, எஸ்.ஜி.பி., எனப்படும், தங்க சேமிப்பு பத்திரங்களிலும் முதலீடு செய்யலாம்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|