பதிவு செய்த நாள்
26 ஏப்2017
04:13

புதுடில்லி : உணவுத் துறையை ஊக்குவிக்க, மத்திய அரசு, அமைப்பு சார்ந்த நிறுவனங்கள் பங்கேற்கும், சர்வதேச உணவு கண்காட்சியை நடத்த உள்ளது.
இந்தியாவில், உணவு பதப்படுத்தும் தொழில் துறைக்கு, அதிகளவில் சந்தை வாய்ப்பு உள்ளது. 2010 – 11ல், உணவு பதப்படுத்துதல் துறையில், அன்னிய நிறுவனங்கள், 576 கோடி டாலர் முதலீடு செய்திருந்தன. இது, 2016 – 17ல், ஏப்., – டிச., நிலவரப்படி, 66.32 கோடி டாலராக உள்ளது. மத்திய அரசு, இணையதள வணிகம், உணவு உற்பத்தி ஆலைகள் அமைத்தல், விளம்பரம் செய்தல் உள்ளிட்ட துறையில், 100 சதவீத அன்னிய நேரடி முதலீடு செய்வதற்கு, கடந்த ஆண்டில் அனுமதி அளித்தது. தற்போது, சர்வதேச உணவு கண்காட்சியை நடத்த, அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து, மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் கூறியதாவது: இந்திய விவசாயிகள் மற்றும் உணவுத் துறையை ஊக்குவிக்க, சர்வதேச உணவு கண்காட்சி, வரும் நவம்பரில், மூன்று நாட்கள் நடக்கிறது. அதில், உணவுத் துறையில் ஈடுபட்டுள்ள உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் பங்கேற்கும். அதன் மூலம், அந்த துறையில், சர்வதேச தொழில்நுட்ப அறிவை, இந்திய விவசாயிகள், உற்பத்தியாளர்கள் பெறுவர். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|