பதிவு செய்த நாள்
26 ஏப்2017
10:10

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வரலாறு காணாத அளவிற்கு அதிரடியாக உயர்ந்துள்ளதன. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது சென்செக்ஸ் 30,000 புள்ளிகளை கடந்த புதிய சாதனை படைத்துள்ளது. சென்செக்ஸ் 30,030.80 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தையான நிப்டி 9328.75 புள்ளிகளாகவும் இருந்தன. தொடர்ந்து காலை 10.00 மணியளவில் சென்செக்ஸ் 139.76 புள்ளிகள் உயர்ந்து 30,083-ஆகவும், நிப்டி 40 புள்ளிகள் உயர்ந்து 9,346-ஆகவும் வர்த்தகமாகின. இதற்கு முன் 2015 ம் ஆண்டு மார்ச் 4 ம் தேதி 30,024 புள்ளிகளை தொட்டதே சென்செக்சின் அதிகபட்ச சாதனையாக கருதப்பட்டது. தற்போது இந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுடன் காணப்படுவதாலும், பிரான்ஸ் தேர்தலின் முதல் சுற்றில் ஆளும் கட்சி வெற்றி பெற்றுள்ளதன் காரணமாகவும், வால் ஸ்ட்ரீட் 3வது நாளாக தொடர்ந்து உச்சத்தை எட்டி உள்ளது, சர்வதேச பங்குச்சந்தைகளில் ஏற்பட்டுள்ள அதிரடி உயர்வு மற்றும் டில்லி மாநகராட்சி தேர்தலில் பா.ஜ., முன்னிலையில் இருந்து வருவதாலும் இந்திய பங்குச்சந்தைகள் புதிய உச்சத்தை எட்டி உள்ளதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|