பதிவு செய்த நாள்
26 ஏப்2017
17:57

மும்பை : கடந்த இருதினங்களாகவே இந்திய பங்குச்சந்தைகள் அதிகளவில் ஏற்றம் கண்டு வந்த நிலையில் இன்று, இன்னும் அதிரடியாக உயர்ந்ததுடன் புதிய உச்சத்தை எட்டி வரலாறு படைத்தன. இன்றைய வர்த்தகம் துவங்கும்போதே சென்செக்ஸ் 30,030.80 புள்ளிகளாக ஆரம்பித்தது. இதற்கு முன் 2015 ம் ஆண்டு மார்ச் 4 ம் தேதி 30,024 புள்ளிகளை தொட்டதே சென்செக்சின் அதிகபட்ச சாதனையாக கருதப்பட்டது. தற்போது அந்த சாதனை முறியடிக்கப்பட்டது.தொடர்ந்து சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த 21 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்வுடன் காணப்பட்டதாலும், பிரான்ஸ் தேர்தலின் முதல் சுற்றில் ஆளும் கட்சி வெற்றி பெற்றுள்ளதன் காரணமாகவும், வால் ஸ்ட்ரீட் 3வது நாளாக தொடர்ந்து உச்சத்தை எட்டியதாலும், ஆசிய மற்றும் ஐரோப்பிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட உயர்வு, அந்நிய முதலீடுகள் அதிகளவில் வந்ததன் காரணமாகவும், தலைநகர் டில்லி மாநகராட்சி தேர்தலில் பா.ஜ., அமோக வெற்றி பெற்றதாலும் இன்றைய வர்த்தகம் நாள் முழுக்க அதிக ஏற்றத்துடன் இருந்ததுடன் புதிய சாதனையையும் எட்டின.வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 190.11 புள்ளிகள் உயர்ந்து 30,133.35 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 45.25 புள்ளிகள் உயர்ந்து 9,351.85-ஆகவும் வர்த்தகத்தை நிறைவு செய்தன. சென்செக்ஸ் மட்டுமல்லாது நிப்டியும் நேற்றைய உச்சமான 9,306.60 புள்ளிகள் என்ற சாதனையையும் முறியடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|