அமேசான், பிளிப்கார்ட்டுடன் மட்டெல் டாய்ஸ் ஒப்பந்தம்அமேசான், பிளிப்கார்ட்டுடன் மட்டெல் டாய்ஸ் ஒப்பந்தம் ... தொடர்ந்து உயர்கிறது ரூபாய் மதிப்பு : 64.05 தொடர்ந்து உயர்கிறது ரூபாய் மதிப்பு : 64.05 ...
‘தொழில் நொடிந்து திவாலாவது இயல்பு; களங்கமாக அதை கருத கூடாது’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஏப்
2017
00:45

புதுடில்லி : ‘‘பல்­வேறு கார­ணங்­க­ளால், தொழில் நொடிந்து, நிறு­வ­னங்­கள் திவா­லா­வதை களங்­க­மாக கரு­தக் கூடாது,’’ என, நிதி அமைச்­ச­கத்­தின், முதன்மை பொரு­ளா­தார ஆலோ­ச­கர் சஞ்­சீவ் சன்­யால் தெரி­வித்து உள்­ளார்.
அவர், பிக்கி – பி.டபிள்யு.சி., இணைந்து தயா­ரித்த, இந்­திய தயா­ரிப்­புத் துறை ஆய்­வ­றிக்­கையை வெளி­யிட்டு, மேலும் பேசி­ய­தா­வது: தொழில்­மு­னைவு சார்ந்த கண்­டு­பி­டிப்­பு­கள் குறித்து, சமூ­கத்­தில் பர­வ­லான புரி­தல் தேவைப்­ப­டு­கிறது. தொழில் செய்­வ­தில், வெற்­றி­யும், தோல்­வி­யும் அடங்­கி­யுள்­ளது. தவ­றான கார­ணம் எது­வு­மின்றி, ஒரு தொழில் நொடி­வ­தும், நிறு­வ­னம் திவா­லா­வ­தும் சக­ஜம். அதை, நிறு­வ­னத்­திற்கு ஏற்­பட்ட களங்­க­மாக பார்க்­கக் கூடாது.
புதுமையான தொழில்கள்:தொழில் மேம்­பாட்டு நட­வ­டிக்­கை­களில், அதிக அள­வி­லான புது­மை­யான முன்­னோடி திட்­டங்­களை நாம் மேற்­கொள்­கி­றோம். அத்­த­கைய சூழ­லில், எந்த அள­விற்கு புது­மை­யான தொழில்­களில் ஈடு­ப­டு­கி­றோமோ, அந்த அள­விற்கு, அவற்­றில் தோல்­வி­யை­யும் சந்­திக்க நேர­லாம் என்ற எதிர்­பார்ப்­பு­டன் இருக்க வேண்­டும். நம் நாட்­டிற்கு, புது­மை­யான கண்­டு­பி­டிப்பு என்ற கலா­சா­ரம் தேவைப்­ப­டு­கிறது. அதே சம­யம், அந்த கலா­சா­ரம், ஒரு சில தோல்­வி­களின் அடிப்­ப­டை­யில் தான் வள­ரும் என்­ப­­தை­யும், நாம் புரிந்து கொள்ள வேண்­டும்.
வளர்ச்­சியை ஏற்­றுக் கொள்­ளும் இத்­த­கைய கலா­சா­ரம், தொழி­லில் ஏற்­படும் தோல்வி, திவால் போன்ற பாத­க­மான அம்­சங்­க­ளை­யும் சகித்­துக் கொள்ள வேண்­டும். எத்­த­கைய நில­வ­ரத்­தை­யும் சமா­ளித்து, செயல்­ப­டக் கூடிய ஆற்­றல், சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­க­ளுக்கு உள்­ளது. சரி­யான வாய்ப்பு கிடைக்­கும்­பட்­சத்­தில், அந்­நி­று­வ­னங்­க­ளால், மிக விரை­வாக, புது­மை­யான கண்­டு ­பி­டிப்­பு­களை மேற்­கொள்ள முடி­யும்.இந்­திய தயா­ரிப்­புத் துறை­யில், பழைய வகை பணி­கள் வழக்­கொ­ழிந்து, புதிய நடை­மு­றை­கள் அறி­மு­க­மாகி வரு­கின்றன. இத்­த­கைய சூழ­லில், நாடு, தொழில்­ம­ய­மாகி வரு­வது குறிப்­பி­டத்­தக்­கது.
தடைக்கற்கள்:அதே சம­யம், இந்­திய பொரு­ளா­தா­ரத்­தில், அனைத்து துறை­களின் பங்­க­ளிப்பு, ஒரே சீராக இல்லை என்­ப­தை­யும் கவ­னத்­தில் கொள்ள வேண்­டும். உதா­ர­ண­மாக, விவ­சா­யம், தயா­ரிப்­புத் துறை­களை விஞ்சி, சேவை­கள் துறை, வளர்ச்­சி­யில் முன்­னிலை வகிப்­பதை குறிப்­பி­ட­லாம். குறிப்­பிட்ட பணி­க­ளுக்கு போதிய ஆட்­கள் கிடைக்­காத சூழ­லும், பணி­யா­ளர்­கள், திறன் வளர்ச்­சி­யில் பின்­தங்கி உள்­ள­தும், இந்­தியா, தொழில் மய­மா­வ­தற்கு தடைக்­கற்­க­ளாக உள்ளன. இப்­பி­ரச்­னை­க­ளுக்கு தீர்வு காண வேண்­டி­யது அவ­சி­யம். இவ்­வாறு அவர் கூறி­னார்.
வங்­க­தே­சத்தை விட, இந்­தி­யா­வில் வரி மற்­றும் வட்டி விகி­தங்­கள் அதி­க­மாக உள்ளன. அவற்றை குறைத்­தால், இந்­திய தொழில் துறை, அண்டை நாடு­களின் போட்­டியை சமா­ளித்து, சர்­வ­தேச சந்­தை­யில் பங்­க­ளிப்பை அதி­க­ரிக்க முடி­யும். இந்­தியா, மிக வேக­மாக வளர்ச்சி கண்டு வரு­கிறது. எனி­னும், அதன் உண்­மை­யான ஆற்­ற­லு­டன் ஒப்­பி­டும் போது, இந்த வளர்ச்சி குறைவு தான்.
-சுர்­ஜித் பல்லா, தலை­வர், ஓக்­சஸ் இன்­வெஸ்ட்­மென்ட்ஸ்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)