88 நிறுவனங்களின் காலாண்டு வருவாய் 9.3 சதவீதம் வளர்ச்சி88 நிறுவனங்களின் காலாண்டு வருவாய் 9.3 சதவீதம் வளர்ச்சி ... இந்தியாவின் ஏற்றுமதியில் தாக்கம் ஏற்பட வாய்ப்பு உள்நாட்டு நிறுவனங்களிடம் நம்பிக்கை அதிகரிப்பு இந்தியாவின் ஏற்றுமதியில் தாக்கம் ஏற்பட வாய்ப்பு உள்நாட்டு ... ...
‘தமிழகத்தில் விரைவில் பால் விற்பனையை துவங்க உள்ளோம்’ - ‘அமுல்’ நிர்வாக இயக்குனர் சோதி சிறப்பு பேட்டி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 மே
2017
08:08


பால் மற்­றும் பால் சார்ந்த பொருட்­கள் துறை­யில், தேசிய அள­வில் பிர­சித்தி பெற்ற, ‘அமுல்’ நிறு­வ­னம், அடுத்த ஆண்­டுக்­குள், தமி­ழ­கத்­தில் பால் விற்­ப­னையை துவங்க உள்­ள­தாக, குஜ­ராத் மில்க் மார்க்­கெட்­டிங் பெட­ரே­ஷ­னின் (ஜி.சி.எம்.எம்.எப்.,) நிர்­வாக இயக்­கு­னர், ஆர்.எஸ்.சோதி, நமது நாளி­த­ழுக்கு அளித்த சிறப்பு பேட்­டி­யில் தெரி­வித்­தார். ஜி.சி.எம்.எம்.எப்., என்ற பால் சந்­தைப்­ப­டுத்­து­தல் கூட்­டு­றவு நிறு­வ­னம், அமுல் எனும் முத்­தி­ரை­யில், பால் பொருட்­களை விற்­பனை செய்­கிறது.கடந்த, ௨௦௧௬ – ௧௭ம் நிதி­யாண்­டில், ௨௭ ஆயி­ரம் கோடி ரூபாய் விற்­ப­னையை எட்­டிய அமுல், ௨௦௨௦க்குள், ௫௦ ஆயிரம் கோடி ரூபாய் விற்­பனை இலக்கை அடைய முயற்­சித்து வரு­கிறது. அதன் பொருட்டு, குஜ­ராத் தவிர பிற மாநி­லங்­களில், வேக­மாக வர்த்­த­கத்தை விரி­வு­ப­டுத்தி வரு­கிறது.இது பற்­றி­யும், ஹிந்­துஸ்­தான் யூனி­லீ­வர் நிறு­வ­னத்­து­ட­னான மோதல்­கள் பற்­றி­யும், நமது நாளி­த­ழுக்கு, ஜி.சி.எம்.எம்.எப்., நிர்­வாக இயக்­கு­னர், ஆர்.எஸ்.சோதி அளித்த பேட்டி:ஐத­ரா­பாத்­தில் வெற்­றி­க­ர­மாக பாக்­கெட் பால் விற்­ப­னையை துவங்­கி­விட்­டீர்­கள், அடுத்து எங்கே?பல மாநி­லங்­களில், சாத்­தி­யக் கூறு­களை ஆராய்ந்து வரு­கி­றோம். எங்­கள் பட்­டி­ய­லில், தமி­ழ­கம் முக்­கிய இடத்­தில் உள்­ளது. அடுத்த ஆண்­டுக்­குள், அங்கு பாக்­கெட் பால் விற்­ப­னையை துவங்க திட்­ட­மிட்டு உள்­ளோம்.ஏன் தமி­ழ­கம்?தமி­ழ­கத்­தில், பால் நுகர்வு அதி­க­ரித்து வரு­கிறது. குறிப்­பாக, பிராண்­டட் பாக்­கெட் பாலுக்கு, தமி­ழ­கத்­தில் நல்ல சந்தை வாய்ப்பு உள்­ளது. பிற மாநி­லங்­களில், பிராண்­டட் பாக்­கெட் பால் நிறு­வ­னங்­கள், நேர­டி­யாக விற்­பனை செய்­யும் பால்­கா­ரர்­க­ளு­டன் போட்டி போட வேண்­டும். ஆனால், தமி­ழ­கத்­தில் அப்­படி இல்லை; பால் சந்­தை­யில் கிட்­டத்­தட்ட, ௧௦௦ சத­வீ­தம் பிராண்­டட் பாக்­கெட் பால் தான். அத­னால், எங்­கள் பாக்­கெட் பாலை சந்­தைப்­ப­டுத்­து­வது சுல­ப­மாக இருக்­கும்.அமுல், நுாற்றுக்­க­ணக்­கான பால் சார்ந்த உண­வுப் பொருட்­களை தயா­ரிக்­கிறது; அவை அனைத்­தும் மதிப்­புக் கூட்­டப்­பட்­டவை; லாப­மும் அதி­கம். அவற்­றில் ஒரு­சில மட்­டும் தான், தமி­ழக சந்­தை­யில் பர­வ­லாக கிடைக்­கின்றன. குறைந்த லாபம் உள்ள பாக்­கெட் பால் விற்­ப­னையை விட, மதிப்­புக் கூட்­டப்­பட்ட பொருட்­களின் விற்­ப­னையை, தமி­ழ­கத்­தில் அதி­கப்­ப­டுத்­து­வது தானே உங்­க­ளுக்கு லாபம்?பாக்­கெட் பாலில், குறைந்த லாபம் தான் உள்­ளது என்­பது உண்மை தான். ஆனால், பாக்­கெட் பால் தான், தின­மும் நுகர்­வோர் வீடு­க­ளுக்­குள் செல்­லக் கூடி­யது. அதன் மூலம், தின­மும் நுகர்­வோரை சந்­தித்­தால் தான், அமுல் மீதான நம்­பிக்­கை­யும், அமு­லு­ட­னான உற­வும் வலுப்­படும். அந்த நம்­பிக்­கை­யும், உற­வும் தான், பிற அமுல் உண­வு­கள் விற்­ப­னைக்கு அடித்­த­ளம். அத­னால் தான், பாக்­கெட் பால் விற்­ப­னைக்கு முக்­கி­யத்­து­வம் கொடுக்­கி­றோம்.தமி­ழ­கத்­தில் பால் பதப்­ப­டுத்­தும் ஆலை அமைக்க போகி­றீர்­களா?இல்லை. துவக்­கத்­தில், ஏற்­க­னவே அங்­குள்ள பால் ஆலையை தான் பயன்­ப­டுத்­தப் போகி­றோம்.அப்­போது வெறுமே, அமுல் பெய­ரில் வேறு யாரா­வது தயா­ரித்து தரப் போகின்றனரா?அப்­படி இல்லை. குறிப்­பிட்ட பால் ஆலை­யில், அமுல் கண்­கா­ணிப்­பில், அமுல் தரக்­கட்­டுப்­பா­டு­கள் மற்­றும் தொழில் கொள்­கை­களின் படி, அமு­லுக்­காக மட்­டும் தான் பால் பதப்­ப­டுத்­தப்­படும். அது, அமுல் ஆலையை போல தான் செயல்­படும்; ஐத­ரா­பாத்­தி­லும், அப்­ப­டித்­தான் செயல்­ப­டு­கி­றோம்.தமி­ழ­கத்­தில், நாட்டு பசு­ இ­னங்­களின் பாலுக்கு ஒரு சந்தை உரு­வாகி வரு­கிறது. அதில், அமுல் கவ­னம் செலுத்த வாய்ப்­புள்­ளதா?அப்­படி ஒரு சந்தை இருக்­கு­மா­னால், அது வெகு­ஜன தேவை­களை பிர­தி­ப­லிக்­கும் சந்தை என, இப்­போது கருத முடி­யாது. முத­லில், வெகு­ஜன சந்­தை­யின் தேவையை பூர்த்தி செய்­வது தான், எங்­கள் அணு­கு­மு­றை­யாக இருக்­கும். குறிப்­பிட்ட தேவை­களை பூர்த்தி செய்­வ­தற்­காக, அமுல் ஏகப்­பட்ட உணவு பொருட்­களை தயா­ரிக்­கிறது. உதா­ர­ண­மாக, பால் அலர்ஜி உள்­ள­வர்­க­ளுக்­காக, ‘லாக்­டோஸ் ப்ரீ’ பால் தயா­ரிக்­கி­றோம்.அதை போல், நாட்டு பசு­வின் பாலுக்­கான தேவையை அறிந்து கொண்டு, அந்த வகை சந்­தை­யி­லும் நுழைய, எங்­க­ளுக்கு எந்த தயக்­க­மும் இல்லை. மேலும், குஜ­ராத்­தில், கால்­நடை இனப்­பெ­ருக்­கம் மற்­றும் மேம்­பாடு பணி­களை, அறி­வி­யல் அடிப்­ப­டை­யில் நெடுங்­கா­ல­மாக மேற்­கொண்டு வரு­கி­றோம். அதில், இந்த பகு­தி­யில் உள்ள நாட்டு பசு­வி­னங்­க­ளான, கிர், கான்க்­ரெஜ், சாகி­வால் ஆகிய இனங்­களின் அபி­வி­ருத்­திக்கு முக்­கி­யத்­து­வம் கொடுக்­கப்­ப­டு­கிறது.ஹிந்­துஸ்­தான் யூனி­லீ­வர் நிறு­வ­னத்­திற்­கும், ஜி.சி.எம்.எம்.எப்.,க்கும் தொடர்ந்து முட்­டல், மோத­லாக இருக்­கி­றதே... தற்­போது கூட, மும்பை ஐகோர்ட்­டில், அமுல் மீது, அந்த நிறு­வ­னம் வழக்கு பதிவு செய்­துள்­ளது. என்ன தான் பிரச்னை?இது, இன்று நேற்று பிரச்னை அல்ல. ௨௦௧௨ல் இருந்தே, அந்த நிறு­வ­னம், எங்­கள் மீது தொடர்ந்து வழக்­கு­களை பதிவு செய்து வரு­கிறது. ஒவ்­வொரு முறை­யும், நாங்­கள் வெற்றி கண்­டுஉள்­ளோம்.பிரம்­மாண்ட பன்­னாட்டு நிறு­வ­னங்­க­ளி­டம், வழக்­கு­களை கையாள்­வ­தற்கு பிரத்­யேக துறை­யும், அதற்­கான நிதி ஒதுக்­கீ­டும் உள்ளன. பெரும் சம்­ப­ளத்­தில், பெரிய பதவி கொடுத்து, அங்கு ஒரு சிலரை பணி­ய­மர்த்தி உள்­ள­னர். அந்த சம்­ப­ளத்­தை­யும், பத­வி­யை­யும் அவர்­கள் நியா­யப்­ப­டுத்­திக் காட்ட வேண்­டாமா?ஐஸ் கிரிம் தான் இந்த முறை பிரச்னை. சட்­டப்­படி, ஐஸ் கிரிம் என்­றால், அதில் பெரும்­ப­குதி பால் சார்ந்த பொருட்­கள் இருக்க வேண்­டும். அமுல் இப்­ப­டிப்­பட்ட ஐஸ் கிரிம் மட்­டும் தான் தயா­ரிக்­கிறது.தோற்­றத்­தில், ஐஸ் கிரிம் போல இருக்­கும் உறை­ய­வைக்­கப்­பட்ட இனிப்பு பண்­டங்­கள், தற்­போது சந்­தை­யில் அதி­க­மா­கி­விட்­டன. அவை பெரும்­ப­குதி, தாவர எண்­ணெ­யால் தயா­ரிக்­கப்­பட்­டவை. சட்­டம் அவற்றை, ‘ப்ரோ­சன் டெஸர்ட்’ என, குறிப்­பி­டு­கிறது. கடை­யில் அவற்றை வாங்­கி­னால், பாக்­கெட்­டில் எங்­கே­னும் ஒரு இடத்­தில், அவ்­வாறு குறிப்­பி­டப்­பட்டு இருக்­கும்.இது, பெரும்­பா­லான நுகர்­வோர் அறி­யாத ஒன்று. அத­னால், நுகர்­வோர் விழிப்­பு­ணர்­விற்­காக ஒரு விளம்­ப­ரத்தை வெளி­யிட்­டோம். அதில், எந்த ஒரு நிறு­வ­னத்­தை­யும் சுட்­டிக்­காட்­ட­வில்லை. ஆனால், ‘க்வா­லிட்டி வால்ஸ்’ என்ற பெய­ரில் உறை­ய­வைக்­கப்­பட்ட இனிப்பு பண்­டங்­களை தயா­ரிக்­கும், ஹிந்­துஸ்­தான் யூனி­லீ­வர், தானாக முன்­வந்து, அந்த விளம்­ப­ரம் அவர்­களை குறி­வைத்து வெளி­யி­டப்­பட்­டது போல் வழக்கு பதிவு செய்­துள்­ள­னர்.தற்­போது, அந்த வழக்கு நிலு­வை­யில் உள்­ளது. அத­னால், அதை பற்றி அனு­மா­ன­மாக எதை­யும் பேச இய­லாது. நாங்­கள் நம்­பிக்­கை­யு­டன் தான் இருக்­கி­றோம். எங்­கள் நுகர்­வோர் விழிப்­பு­ணர்வு விளம்­ப­ர­மும், நல்ல வர­வேற்­போடு ஒளி­ப­ரப்­பா­கிக் கொண்டு இருக்­கிறது.
– நமது சிறப்பு நிரு­பர் –

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
வளமான எதிர்காலத்திற்கு திட்டமிட்டு முதலீடு செய்வது அவசியம். சரியான முதலீடு சாதனங்களை தேர்வு செய்வதோடு, ... மேலும்
business news
வட்டி விகித உயர்வு, கட்டுமான பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட அம்சங்களை மீறி, ரியல் வீடுகளுக்கான தேவை ... மேலும்
business news
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
business news
பொதுவாக, 60 வயது முதல் 80 வரையான மூத்த குடிமக்களுக்கான வருமான வரிச் சலுகைகள் குறித்து விளக்கவும். ... மேலும்
business news
புதுடில்லி:உணவு வினியோகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனமான ஸ்விக்கி, உணவக தொழில்நுட்ப நிறுவனமான ‘டைன் அவுட்’ ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)