பதிவு செய்த நாள்
02 மே2017
08:09

புதுடில்லி : ‘அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற வளர்ந்த நாடுகள், ‘உள்நாட்டினருக்கு வேலைவாய்ப்பு; உள்நாட்டு உற்பத்திக்கு முன்னுரிமை’ என, ‘பாதுகாப்புரிமை’ கொள்கையை கடைபிடிக்க துவங்கியுள்ளன. இது, வளர்ந்த நாடுகளுக்கான இந்தியாவின் ஏற்றுமதியில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்’ என, இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பான, ‘பிக்கி’ தெரிவித்து உள்ளது.இது குறித்து, ‘பிக்கி’ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை:கடந்த மார்ச் – ஏப்., மாதங்களில், 185 நிறுவனங்களின் செயல்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டன. அதில், பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் பாதிப்பில் இருந்து, அவை வெகு விரைவாக விடுபட்டு, வளர்ச்சியை நோக்கி திரும்பியுள்ளது தெரிய வந்தது. அதே சமயம், வளர்ந்த நாடுகளின் பாதுகாப்புரிமை கொள்கையால், ஏற்றுமதி குறையுமோ என்ற அச்சமும் உள்ளது.ஆய்வில் பங்கேற்ற, 65 சதவீத நிறுவனங்கள், செப்., வரை, விற்பனை நன்கு இருக்கும் என, நம்பிக்கை தெரிவித்து உள்ளன. அது போல, 42 சதவீத நிறுவனங்கள், லாபம் உயரும் என, எதிர்பார்க்கின்றன.தற்போது உள்ளதை விட, ஏற்றுமதிக்கான தேவை அதிகரிக்கும் என, 31 சதவீத நிறுவனங்கள் கூறியுள்ளன. கூடுதல் பணியாளர்களை நியமிக்க உள்ளதாக, 27 சதவீத நிறுவனங்கள் தெரிவித்து உள்ளன. முதலீடுகளை அதிகரிக்க, 40 சதவீத நிறுவனங்கள் திட்டமிட்டு உள்ளன.ரிசர்வ் வங்கி, கடனுக்கான வட்டியை குறைத்துள்ள போதிலும், அவற்றின் பயனை, வங்கிகள் வழங்கவில்லை என, பெரும்பான்மையான நிறுவனங்கள் கவலை தெரிவித்து உள்ளன.கடந்த ஆறு மாதங்களுக்கு முன் இருந்ததை விட, தற்போது, பொருளாதார சூழல் மேம்பட்டு உள்ளதாக, 54 சதவீத நிறுவனங்களும், இது, அடுத்த ஆறு மாதங்களில், மேலும் மேம்படும் என, 79 சதவீத நிறுவனங்களும் நம்பிக்கை கொண்டுள்ளன.நாட்டின் பணப்புழக்கம், எதிர்பார்த்ததை விட, விரைவாக இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. இதனால், கார்ப்பரேட் நிறுவனங்களின் செயல்பாடுகள், சகஜ நிலைக்கு மாறியிருப்பது, ஆய்வில் தெரிய வந்துள்ளது.நிறுவனங்களிடையே, வளர்ச்சியில் நம்பிக்கை குறித்த அளவீடு, கடந்த இரு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது. இது, பண மதிப்பு நீக்கம் காரணமாக, கடந்த ஆய்வில், இதே அளவிற்கு சரிவை கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
தொழில் துறை குமுறல்குறைந்த வட்டியில் கடன் வழங்கினால், தொழில் வளர்ச்சி பெருகும் என்ற நோக்கத்தில், கடந்த இரு ஆண்டுகளாக, மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.ரிசர்வ் வங்கி, 2015 ஜன., – 2016 அக்., வரை, வங்கிகள் பெறும் கடனுக்கான, ‘ரெப்போ’ வட்டி விகிதத்தை, 1.75 சதவீதம் குறைத்தது. ஆனால், வங்கிகள், இதே அளவில், கடனுக்கான வட்டியை குறைக்கவில்லை. ஓரளவு மட்டுமே குறைத்துஉள்ளதாக, தொழில் துறையினர் குமுறுகின்றனர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|