பதிவு செய்த நாள்
04 மே2017
07:40
புதுடில்லி : தொழில் துறை உற்பத்தி குறியீட்டை கணக்கிட உதவும், அடிப்படை ஆண்டு மாறுகிறது. தற்போது, 2004 – 05ம் நிதியாண்டின் அடிப்படையில், தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி மதிப்பீடு செய்யப்பட்டு, அதன்படி, குறியீடு வெளியிடப்பட்டு வருகிறது.இந்த நடைமுறை மாறுகிறது. இனி, 2011 – 12ம் நிதியாண்டின் அடிப்படையில், நாட்டின் தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி மதிப்பிடப்பட்டு, அதன்படி, குறியீடு வெளியிடப்படும்.இதன் மூலம், நாட்டின் தொழில் வளர்ச்சி குறித்து, மேலும் துல்லியமாக மதிப்பிட முடியும்.இந்த புதிய நடைமுறையை, மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சக செயலர், டி.சி.ஏ.ஆனந்த், வரும், 9ம் தேதி துவக்கி வைக்க உள்ளார்.இது போல, மொத்த விலை பணவீக்க குறியீடும், 2011 – 12ம் நிதியாண்டின் அடிப்படையில், மதிப்பீடு செய்யப்பட உள்ளது. சில்லரை விலை பணவீக்க குறியீடு, ஏற்கனவே, இதே நிதியாண்டின் அடிப்படையில் வெளியிடப்பட்டு வருகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|