பதிவு செய்த நாள்
07 மே2017
04:07
மும்பை : ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் துவங்கப்பட்டு, 24 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு, விமான டிக்கெட்டில், 24 சதவீதம் தள்ளுபடி என்ற சிறப்பு சலுகையை அறிவிக்கப்பட்டு உள்ளது.உள்நாட்டில், விமான சேவையில், ஜெட் ஏர்வேஸ் முன்னணியில் உள்ளது. இந்நிறுவனத்திற்கு, 112 விமானங்கள் உள்ளன. இவை, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள, 65 முனையங்கள் வழியாக இயக்கப்படுகின்றன.ஜெட் ஏர்வேஸ் துவங்கி, 24 ஆண்டுகள் ஆகின்றன. அதை கொண்டாடும் வகையில், அந்நிறுவனம், வாடிக்கையாளருக்கு சிறப்பு கட்டண சலுகை வழங்கியுள்ளது.அதன்படி, உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயணங்களுக்கு விமான டிக்கெட் எடுப்பதில், அடிப்படை கட்டணத்தில், 24 சதவீத தள்ளுபடி வழங்கப்பட்டு உள்ளது.இந்த சலுகை, வரும் ஜூன், 16ல் இருந்து, ஒரு நாள் விமான பயணங்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்வோருக்கு கிடைக்கும். சாதாரண மற்றும் பிரீமியர் வகுப்புகளுக்கும், உள்நாட்டில் குறுகிய துார பயணத்திற்கும், இந்த சலுகை பொருந்தும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|