பதிவு செய்த நாள்
10 மே2017
07:00

புதுடில்லி : மருந்து துறையில் ஈடுபட்டுள்ள, இரிஸ் லைப்சயன்சஸ் நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீட்டிற்கு, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான, ‘செபி’ அனுமதி வழங்கியுள்ளது.
இந்த பங்கு வெளியீட்டின் மூலம், 2,000 கோடி ரூபாய் திரட்ட, இரிஸ் லைப்சயன்சஸ் திட்டமிட்டு உள்ளது.ஆக்சிஸ் கேப்பிட்டல், சிட்டி குரூப் மார்க்கெட்ஸ் இந்தியா, கிரெடிட் சூசி செக்யூரிட்டிஸ் இந்தியா ஆகிய நிறுவனங்களுக்கு, பங்கு வெளியீட்டை நிர்வகிக்கும் உரிமை வழங்கப்பட்டு உள்ளது.பங்கு வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு, விரைவில் வெளியாகும் என, தெரிகிறது. பங்கு வெளியீடு முடிவடைந்ததும், பங்குகள், மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்படும்.
கடந்த, 2007ல் துவக்கப்பட்ட இரிஸ் லைப் சயன்சஸ் நிறுவனம், தீவிர நோய்களுக்கான மூல மருந்துகளை தயாரித்து, விற்பனை செய்து வருகிறது. 2016 செப்., 30 நிலவரப்படி, இந்நிறுவனத்தில், 2,287 பேர் பணியாற்றுகின்றனர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|