பதிவு செய்த நாள்
10 மே2017
07:02

முதலீட்டுக்கு உகந்த மாநிலங்களை வரிசைப்படுத்துவதற்கான பட்டியலில் இடம் பெறுவதற்கான அம்சங்களை, மத்திய அரசு, இந்தாண்டு மேலும் கடுமையாக்கி உள்ளது.
முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கான அம்சங்கள் உள்ள நாடுகளின் பட்டியலில், 2015ல், 142வது இடத்திற்கு இந்தியா தள்ளப்பட்டது. அதனால், அதில் முன்னேறுவதற்காக, அனைத்து மாநிலங்களுக்கும் அதே போன்ற தரவரிசை பட்டியலை, இந்தியா, 2015 முதல் வெளியிட துவங்கியது. அதன்படி, முதலீட்டுக்கு தேவையான அம்சங்கள் பற்றிய, பல்வேறு நிபந்தனைகளை மத்திய அரசு விதிக்கிறது. அதை செய்வதன் மூலம், இந்தியாவின் ஒட்டுமொத்த போட்டியிடும் தன்மை அதிகரிக்கும் என, மத்திய அரசு கருதியது. மத்திய அரசு முதன்முறையாக, 2015ல் வெளியிட்ட பட்டியலில், தமிழகத்திற்கு, 12வது இடம் கிடைத்தது. ஆனால், 2016ல், 18வது இடத்திற்கு கீழிறங்கியது. இதனால், முதலீட்டாளர்கள் இங்கு வரத் தயங்கும் நிலை உருவானது.
இந்நிலையில், 2017க்கான பட்டியலை தயாரிப்பதற்காக, அது தொடர்பான கேள்விகள் அடங்கிய பட்டியலை, மத்திய அரசு அனுப்பியுள்ளது. அது, இம்முறை மேலும் கடுமையாக்கப்பட்டு உள்ளது. இது குறித்து, தமிழக அதிகாரிகள் கூறியதாவது: கடந்த ஆண்டில், மத்திய அரசு, 340 அம்சங்கள் அடங்கிய நிபந்தனைகளை விதித்து, கேள்வி பட்டியலை அனுப்பியது. அதில், 263 கேள்வி களுக்கு, நாங்கள் பதில் அனுப்பியிருந்தோம். ஆனால், அவர்கள், 211 பதில்களை மட்டுமே ஏற்றனர். எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், மற்றதை ஏற்கவில்லை. இம்முறை, கடந்த ஆண்டை விட, அதிக கேள்விகளை கேட்டு, பெரிய பட்டியலை மத்திய வர்த்தக துறை அனுப்பியுள்ளது.அதில், 405 கேள்விகள் இடம் பெற்றுள்ளன. அதை பார்த்தாலே மலைப்பாக உள்ளது. எனினும், அதற்கான பதில்களை தயார் செய்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
– நமது நிருபர் –
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|