பதிவு செய்த நாள்
10 மே2017
07:03

புதுடில்லி : லாயிட் எலக்ட்ரிக் அண்டு இன்ஜினியரிங் நிறுவனத்தின் நுகர்வோர் சாதனங்கள் பிரிவு, ‘ஏசி, வாஷிங் மிஷின், டிவி’ உள்ளிட்ட வீட்டு பயன்பாட்டு சாதனங்களின் கொள்முதல், ஒருங்கிணைப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இப்பிரிவை, 1,600 கோடி ரூபாய்க்கு, மின் சாதனங்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள, ஹேவல்ஸ் இந்தியா கையகப்படுத்தியுள்ளது.இதன் மூலம், ஹேவல்ஸ், வீட்டு பயன்பாட்டு சாதனங்கள் துறையிலும் கால் பதித்துள்ளது.
இது குறித்து, ஹேவல்ஸ் இந்தியா நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான, அனில் ராய் குப்தா கூறியதாவது: லாயிட் நிறுவனத்தின் நுகர்வோர் சாதனங்கள் பிரிவை கையகப்படுத்தும் பணி முடிவடைந்தது. உள் நிதியாதாரங்களை திரட்டி, இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றியுள்ளோம். இதன் மூலம், அதிக வளர்ச்சி கண்டு வரும் துறையில், கால் பதித்துள்ளோம். எங்கள் வாடிக்கையாளர்களுக்கு, மேம்பட்ட தரத்தில், பல தரப்பட்ட வீட்டு பயன்பாட்டு சாதனங்களை அளிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதை வெற்றிகரமாக செயல்படுத்தி, வளர்ச்சி காண்போம்.இவ்வாறு அவர் கூறினார்.
ஹேவல்ஸ் நிறுவனத்திற்கு, நொய்டா, ஹரித்துவார் உள்ளிட்ட இடங்களில், 11 தயாரிப்பு தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு, மின்விசிறி, கேபிள், மோட்டார் உள்ளிட்ட பலதரப்பட்ட மின் சாதனங்கள் தயாரிக்கப் படுகின்றன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|