பதிவு செய்த நாள்
10 மே2017
07:03

சென்னை : ‘பாரத ஸ்டேட் வங்கியில், 30 லட்சம் ரூபாய் வரை வீட்டுக் கடனுக்காக, ஜூலை, 31 வரை விண்ணப்பிப்போருக்கு, மிகக்குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படும்’ என, அதன் தமிழக முதன்மை பொது மேலாளர், பி.ரமேஷ் பாபு தெரிவித்து உள்ளார்.
சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில், அவர் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், குறைந்த வருவாய் உள்ளவர்கள் சொந்த வீடு பெறுவதற்கு, எஸ்.பி.ஐ., வங்கி அதன் பங்காக, குறைந்த வட்டியில் கடன் வழங்குகிறது. அதன்படி, 30 லட்சம் ரூபாய்க்கு குறைவான வீட்டுக் கடன்களுக்கு, கால் சதவீதம் வட்டி குறைக்கப்பட்டு உள்ளது.பெண்களுக்கு, 8.35; ஆண்களுக்கு, 8.4 சதவீதத்தில் கடன் வழங்கப்படும். இரு ஆண்டுகளுக்கு இவ்வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்காது.
ஜூலை, 31 வரை விண்ணப்பிப்போருக்கு, இந்த வட்டி விகிதத்தில் கடன் கிடைக்கும். இந்த வட்டி தள்ளுபடியால், 30 ஆண்டு கடனாக இருந்தால், 6.5 லட்சம் ரூபாயை சேமிக்க முடியும். தமிழகம் – புதுவையில், 25 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வீட்டுக் கடன் தந்துள்ளோம். மேலும், தமிழகத்தில் குறிப்பிட்ட, 725 நகரங்களில் வசிக்கும், 6 லட்சம் ரூபாய் ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு, வீட்டுக் கடனில், 2.67 லட்சம் ரூபாய் மானியமும் அளிக்கப்படுகிறது.இவ்வாறு அவர் தெரிவித்தார். அப்போது, பொது மேலாளர் ஜோன்னா ராகவா, துணை பொது மேலாளர், ஆர்.குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|