காக்னிஸன்ட் – விப்ரோ வழியில் இன்போசிஸ் நிறுவனமும் ஆட்குறைப்புகாக்னிஸன்ட் – விப்ரோ வழியில் இன்போசிஸ் நிறுவனமும் ஆட்குறைப்பு ... அடுத்த 5 ஆண்டுகளில்... உலகளவில் திறமையான வல்லுனர்களின் பணியிடத்தை ரோபோக்கள் ஆக்கிரமிக்கும் அடுத்த 5 ஆண்டுகளில்... உலகளவில் திறமையான வல்லுனர்களின் பணியிடத்தை ... ...
பத்திரிகை விற்பனை விறுவிறு வளர்ச்சி; 10 ஆண்டுகளில் 2.37 கோடி அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 மே
2017
08:21

மும்பை : ‘ஊட­கத் துறை­யில், டிவி, வானொலி, வலை­த­ளம் போன்ற கடு­மை­யான போட்­டிக்கு இடை­யி­லும், பத்­தி­ரிகை விற்­பனை, கடந்த, 10 ஆண்­டு ­களில், 2.37 கோடி அதி­க­ரித்­துள்­ளது’ என, ஆடிட் பீரோ ஆப் சர்­கு­லே­ஷன்ஸ் அமைப்பு தெரி­வித்து உள்­ளது.
இது குறித்து, இந்த அமைப்பு வெளி­யிட்­டுள்ள அறிக்கை: இந்­தி­யா­வில் கல்­வி­ய­றிவு அதி­க­ரித்து வரு­வ­தால், பத்­தி­ரிகை விற்­பனை, குறிப்­பி­டத்­தக்க வளர்ச்­சியை கண்டு வரு­கிறது. பொரு­ளா­தார வளர்ச்­சி­யும், பெருகி வரும் நகர்ப்­பு­றங்­களும், சொத்து, பொருட்­கள் உள்­ளிட்­ட­வற்றை வாங்­கு­வ­தில், மக்­க­ளுக்கு உள்ள ஆர்­வ­மும், பத்­தி­ரி­கை­களை படிக்க துாண்டு­கின்றன. இத­னால், பத்­தி­ரிகை விற்­பனை அதி­க­ரித்து வரு­கிறது. மக்­களின் அன்­றாட வாழ்க்­கை­யின் ஓர் அங்­க­மாக, பத்­தி­ரிகை படிக்­கும் வழக்­கம் பின்­னிப் பிணைந்­துள்­ளது.எந்த நேரத்­தி­லும் படிக்­கும் வசதி; குறைந்த செல­வில் செய்­தி­களை அறி­யும் வாய்ப்பு; உள்­ளூர் தக­வல்­க­ளு­டன், பல்­வேறு துறை­க­ளுக்கு பிரத்­யேக பகு­தி­கள் உள்­ள­தும், பத்­தி­ரிகை விற்­பனை உயர துணை நிற்­கின்றன.
பத்­தி­ரி­கை­கள், செய்­தி­களை நம்­ப­கத்­தன்­மை­யு­டன், விரி­வா­க­வும், துல்­லி­ய­மா­க­வும் எடுத்­துக் கூறு­கின்றன. வெளி­நா­டு­களை போலன்றி, இந்­தி­யா­வில், பத்­தி­ரி­கை­கள் வீடு தேடி வினி­யோ­கம் செய்­யப்­ப­டு­வ­தும், அவற்­றின் விற்­பனை உயர வழி­வ­குத்­துள்­ளது. இது போன்ற கார­ணங்­க­ளால், 2006ல், தின­மும், 3.91 கோடி­யாக இருந்த பத்­தி­ரி­கை­களின் விற்­பனை, 2016ல், 2.37 கோடி அதி­க­ரித்து, 6.28 கோடி­யாக உயர்ந்­துள்­ளது. இதே காலத்­தில், பத்­தி­ரி­கை­களின் எண்­ணிக்­கை­யும், 659லிருந்து, 910 ஆக உயர்ந்­துள்­ளது.
தேசிய அள­வில் பத்­தி­ரிகை விற்­பனை உயர்­வில், பிராந்­திய மொழி பத்­தி­ரி­கை­கள் முக்­கிய பங்கு வகிக்­கின்றன. மதிப்­பீட்டு காலத்­தில், ஹிந்தி பத்­தி­ரி­கை­கள், 8.76 சத­வீத ஆண்டு வளர்ச்­சி­யு­டன் முத­லி­டத்­தில் உள்ளன. அடுத்த இடங்­களில், தெலுங்கு, 8.28 சத­வீ­தம், கன்­ன­டம், 6.40 சத­வீ­தம், தமிழ், 5.51 சத­வீ­தம் என்ற அள­வில் வளர்ச்சி கண்­டு உள்ளன. பத்­தி­ரிகை விளம்­பர வரு­வா­யில், வளர்ச்சி கண்டு வரும் ஒரு­சில நாடு­களில், இந்­தி­யா­வும் ஒன்­றாக உள்­ளது. வளர்ந்த நாடு­கள் பல­வற்­றில், பத்­தி­ரிகை விற்­பனை குறைந்து வரும் நிலை­யில், இந்­தி­யா­வில் அதன் விற்­பனை அதி­க­ரித்து வரு­கிறது. இவ்­வாறு அதில் கூறப்­பட்டு உள்­ளது.
ஆடிட் பீரோ ஆப் சர்­கு­லே­ஷன்ஸ் அமைப்பு, நாடு முழு­வ­தும் வெளி­யா­கும் பத்­தி­ரி­கை­களின் விற்­ப­னையை, அரை­யாண்­டுக்கு ஒரு­முறை மதிப்­பீடு செய்து, அறிக்கை வெளி­யிட்டு வரு­கிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)