பத்திரிகை விற்பனை விறுவிறு வளர்ச்சி; 10 ஆண்டுகளில் 2.37 கோடி அதிகரிப்புபத்திரிகை விற்பனை விறுவிறு வளர்ச்சி; 10 ஆண்டுகளில் 2.37 கோடி அதிகரிப்பு ... மீண்டும் ஏறுமுகத்திற்கு திரும்பிய ரூபாய் மதிப்பு : 64.49 மீண்டும் ஏறுமுகத்திற்கு திரும்பிய ரூபாய் மதிப்பு : 64.49 ...
அடுத்த 5 ஆண்டுகளில்... உலகளவில் திறமையான வல்லுனர்களின் பணியிடத்தை ரோபோக்கள் ஆக்கிரமிக்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 மே
2017
08:22

மும்பை : ‘அடுத்த ஐந்து ஆண்­டு­களில், நன்கு பயிற்சி பெற்ற வல்­லு­னர்­களின் பணி­களை செய்ய, ‘ஸ்மார்ட் மிஷின்­கள் மற்­றும் ரோபோக்­கள்’ பயன்­ப­டுத்­தப்­படும்’ என, கார்ட்­னர் பெல்லோ நிறு­வ­னத்­தின் ஆய்­வ­றிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.
அதன் விப­ரம்: பல்­வேறு துறை­களில், செயற்கை நுண்­ண­றி­வு­டன் செயல்­படும் ஸ்மார்ட் மிஷின்­கள் மற்­றும் ரோபோக்­களின் பயன்­பாடு பெருகி வரு­கிறது. குறிப்­பாக, 2022ல், மருத்­து­வம், சட்­டம் மற்­றும் தக­வல் தொழில்­நுட்­பத் துறை­களில், அதிக பயிற்சி பெற்ற வல்­லு­னர்­கள் செய்­யும் பல தரப்­பட்ட பணி­களை, ஸ்மார்ட் மிஷின்­கள், ரோபோக்­கள் ஆகி­யவை, குறைந்த செல­வில் முடித்­துக் கொடுத்­து­வி­டும்.
செயற்iகை நுண்ணறிவுதற்­போது, உல­க­ள­வில், பல்­வேறு தொழில்­க­ளுக்கு ஏற்ப, செயற்கை நுண்­ண­றி­வு­டன் செயல்­படும் சாப்ட்­வேர்­களை உரு­வாக்­கு­வது அதி­க­ரித்து வரு­கிறது. இத்­த­கைய சாப்ட்­வேர்­க­ளுக்கு ஏற்ப, தொழில் நிறு­வ­னங்­கள், அவற்­றின் வணி­கச் செயல்­பா­டு­களை அமைத்து, சிக்­க­லான பணி­களை, குறைந்த செல­வில், சுல­ப­மாக முடித்­துக் கொள்­கின்றன.இதன் கார­ண­மாக, வருங்­கா­லத்­தில், சில தொழில்­களில் பணி­யா­ளர்­கள் எண்­ணிக்கை குறை­யும் என்ற போதி­லும், பல துறை­கள் இத­னால் பயன் பெறும். நிறு­வ­னங்­கள், திரும்­பத் திரும்ப ஒரே வகை­யான பணி­களை செய்­வ­தற்கு, செயற்கை நுண்­ண­றிவு இயந்­தி­ரங்­க­ளை­யும், தானி­யங்கி செயல்­மு­றை­க­ளை­யும் நாடும்.
சிக்கல்அதே சம­யம், சவா­லான விஷ­யங்­க­ளுக்கு தீர்வு காண்­பது, சேவை­யின் தரத்தை மேம்­ப­டுத்­து­வது உள்­ளிட்ட பணி­க­ளுக்கு, ஊழி­யர்­களை பயன்­ப­டுத்­திக் கொள்­ளும். செயற்கை நுண்­ண­றிவு இயந்­தி­ரங்­கள், சாப்ட்­வேர் கட்­ட­ளைப்­படி, ஏற்­க­னவே வரை­ய­றுக்­கப்­பட்ட பிரச்­னை­க­ளுக்கு தீர்வு காணும் பணியை மேற்­கொள்­கின்றன. ஆனால், மனி­தர்­கள், தீர்வு காண வேண்­டிய பிரச்­னை­களை கண்­டு­பி­டிப்­ப­தி­லும், சிக்­க­லான பிரச்­னை­க­ளுக்கு, எந்த வகை­யில் தீர்வு காண­லாம் என சிந்­திப்­ப­தி­லும், திற­மை­சா­லி­க­ளாக உள்­ள­னர். அத­னால், வருங்­கா­லத்­தில், இயந்­தி­ரங்­களும், மனி­தர்­களும் பரஸ்­ப­ரம் இணைந்து பணி­யாற்­றும் சூழல் உரு­வா­கும்.
எனி­னும், செயற்கை நுண்­ண­றிவு இயந்­தி­ரங்­களை அதி­கம் சார்ந்­தி­ருக்­கும் நிறு­வ­னங்­கள், சந்­தை­யில் அவ்­வப்­போது ஏற்­படும் மாற்­றங்­க­ளுக்கு ஏற்ப, உட­ன­டி­யாக மாறு­வ­தில் சிக்­கலை சந்­திக்க நேரும். அத்­த­கைய சூழ­லில், நிறு­வ­னங்­க­ளுக்கு ஊழி­யர்­களின் தயவு தேவைப்­படும். இவ்­வாறு அதில் கூறப்­பட்டு உள்­ளது.
காணாமல் போக வாய்ப்புதக­வல் தொழில்­நுட்­பத் துறை­யில், குறிப்­பாக, ‘சிஸ்­டம் அட்­மி­னிஸ்ட்­ரே­ஷன், உதவி மையம், புரா­ஜெக்ட் மேனேஜ்­மென்ட், அப்­ளி­கே­ஷன் சப்­போர்ட்’ போன்ற பணி­களை, செயற்கை நுண்­ண­றிவு இயந்­தி­ரங்­கள் ஆக்­கி­ர­மிக்­கும்; ஒரு­சில பணி­கள் காணா­மல் போக­வும் வாய்ப்­புண்டு.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)