பதிவு செய்த நாள்
12 மே2017
06:26
மும்பை : ஸ்டெர்லைட் பவர் கிரிட் வென்சர்ஸ் நிறுவனத்தின், இந்தியா கிரிட், ‘இன்விட்’ நிதியத்தின் பங்கு வெளியீடு, வரும், 17ல் துவங்கி, 19ல் முடிவடைகிறது; ஒரு யூனிட் விலை, 98 – 100 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வெளியீட்டின் மூலம், 2,250 கோடி ரூபாய் திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தியா கிரிட், 11 மாநிலங்களில், மின் வினியோக திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. அத்துடன், 13,890 மெகாவாட் மின் வினியோக திறன் கொண்ட, ஒன்பது துணை மின் நிலையங்களையும் நிர்வகித்து வருகிறது. பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டப்படும் தொகையில், 1,000 கோடி ரூபாய், கடன்களை திரும்பத் தர பயன்படுத்திக் கொள்ளப்படும். எஞ்சிய தொகை, நிர்வாக செயல்பாடு களுக்கு ஒதுக்கப்படும். கடந்த வாரம், ஐ.ஆர்.பி., இன்ப்ரா இன்விட், பங்கு வெளியீட்டில், 5,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக நிதி திரட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|