இந்தியா கிரிட் ‘இன்விட்’ நிதியம்; பங்கு வெளியீடு 17ல் துவக்கம்இந்தியா கிரிட் ‘இன்விட்’ நிதியம்; பங்கு வெளியீடு 17ல் துவக்கம் ... இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 64.26 இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 64.26 ...
நுகர்பொருள் துறையில் புதிய மாற்றம்; சில்லரை விற்பனையில் நிறுவனங்கள் தீவிரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 மே
2017
06:26

மும்பை : பண மதிப்பு நீக்க நட­வ­டிக்­கை­யால், கறுப்­புப் பணப்­பு­ழக்­கம் குறைந்­ததோ இல்­லையோ, மக்­கள், ‘டிஜிட்­டல்’ பணப் பரி­வர்த்­த­னைக்கு மாறு­வது அதி­க­ரித்­து உள்­ளது; அத்­து­டன், நிறு­வ­னங்­களின் வர்த்­தக நிலைப்­பா­டும் மெல்ல மாறி வரு­கிறது. குறிப்­பாக, பணத் தட்­டுப்­பாடு ஏற்­பட்ட போது, மொத்த விற்­ப­னை­யில் பாதிப்பை சந்­தித்த நுகர்­பொ­ருள் நிறு­வ­னங்­கள், தற்­போது, புதிய வர்த்­தக நடை­மு­றையை பின்­பற்ற துவங்­கி­உள்ளன.
இதன்­படி, இமாமி, டாபர், பஜாஜ் கார்ப்­ப­ரே­ஷன் போன்ற நுகர்­பொ­ருள் நிறு­வ­னங்­கள், இடைத்­த­ர­கர்­கள் இன்றி, அவற்­றின் பொருட்­களை, நேர­டி­யாக நுகர்­வோ­ருக்கு சில்­ல­ரை­யில் விற்­பனை செய்­வ­தில் தீவி­ர­மாக இறங்­கி­உள்ளன. ஜூலை, 1ல் அறி­மு­க­மாக உள்ள, ஜி.எஸ்.டி., வரி­யால் ஏதா­வது தாக்­கம் நேர்ந்­தா­லும், அதை சமா­ளிக்க, புதிய நடை­முறை உத­வும் என, இந்­நி­று­வ­னங்­கள் நம்­பு­கின்றன.
இது குறித்து, ஆரோக்­கிய பரா­ம­ரிப்பு பொருட்­களை தயா­ரிக்­கும் இமாமி நிறு­வ­னத்­தின், இயக்­கு­னர் மோகன் கோயங்கா கூறி­ய­தா­வது: பணத் தட்­டுப்­பாடு ஏற்­பட்ட போது, எங்­கள் தயா­ரிப்­பு­கள் சில­வற்­றின் விற்­ப­னை­யில் பாதிப்பு ஏற்­பட்­டது. இதை­ய­டுத்து, மொத்த விற்­பனை சார்ந்த வர்த்­த­கத்தை ஓர­ளவு குறைத்து, நேரடி சில்­லரை விற்­ப­னை­யில் கவ­னம் செலுத்­தத் துவங்­கி­யுள்­ளோம். இதற்­காக, ‘ரேஸ், தனுஷ்’ என்ற இரு திட்­டங்­களின் கீழ், 5,000 மக்­கள் தொகைக்கு குறை­வாக உள்ள, 6,000 கிரா­மப்­பு­றங்­களில், வாக­னங்­கள் மூலம் எங்­கள் பொருட்­களை நேர­டி­யாக விற்­பனை செய்­கி­றோம்.
இதன் மூலம், நடப்பு நிதி­யாண்டில், நேரடி வர்த்­த­கம் மேற்­கொள்­ளும் சில்­லரை விற்­பனை கடை­களின் எண்­ணிக்­கையை, 90 ஆயி­ரத்­தில் இருந்து, 7.30 லட்­ச­மாக உயர்த்த இலக்கு நிர்­ண­யித்து உள்­ளோம். இதை, அடுத்த நிதி­யாண்­டில், 8.30 லட்­ச­மாக உயர்த்­த­வும் திட்­ட­மிட்டு உள்­ளோம். தற்­போது, நிறு­வ­னத்­தின் விற்­ப­னை­யில், மொத்த விற்­பனை, 55 சத­வீ­தத்­தில் இருந்து, 50 – 52 சத­வீ­த­மாக குறைந்­துள்­ளது. இதை, அடுத்த ஆண்டு, 40 – 42 சத­வீ­த­மாக குறைக்க இலக்கு நிர்­ண­யித்து உள்­ளோம். இவ்­வாறு அவர் கூறி­னார்.
நிறு­வ­னத்­தின் விற்­ப­னை­யில், சில்­லரை விற்­ப­னை­யின் பங்கை, குறைந்­த­பட்­சம், 20 சத­வீ­த­மாக உயர்த்த திட்­ட­மிட்டு உள்­ளோம். நகர்ப்­பு­றங்­களில், நேர­டி­யா­க­வும், கிரா­மப்­பு­றங்­களில் துணை வினி­யோ­கஸ்­தர்­கள் மூல­மும், எங்­கள் ஆயுர்­வேத பொருட்­களை விற்­பனை செய்­கி­றோம். மொத்த விற்­பனை முறையை முற்­றி­லு­மாக மாற்­று­வது இய­லாத காரி­யம்.-சுனில் துகால்,தலைமை செயல் அதி­காரி, தாபர் இந்­தியா
பஜாஜ் ஆல்­மண்ட் டிராப்ஸ், நோமார்க்ஸ் உள்­ளிட்ட ஆரோக்­கிய பரா­ம­ரிப்பு பொருட்­களை, கிரா­மப்­புற சந்­தை­களில் நேர­டி­யாக விற்­பனை செய்து வரு­கி­றோம். நிறு­வ­னத்­தின் விற்­ப­னை­யில், மொத்த விற்­பனை, 47 சத­வீ­த­மாக உள்­ளது. இதை, அடுத்த, 12 – 18 மாதங்­களில், 40 சத­வீ­தத்­திற்­கும் கீழாக குறைக்க, இலக்கு நிர்­ண­யித்து உள்­ளோம்.-சுமித் மல்­ஹோத்ரா, நிர்­வாக இயக்­கு­னர், பஜாஜ் கார்ப்­ப­ரே­ஷன்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)