பதிவு செய்த நாள்
12 மே2017
16:20

மும்பை : காலை நேர வர்த்தகத்தின் போது ஏற்றத்துடன் காணப்பட்ட இந்திய பங்குச்சந்தைகள் பிற்பகல் வர்த்தகத்தின் போது சரிய துவங்கின. ஆசிய பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட நெருக்கடி நிலையின் காரணமாக இந்திய பங்குச்சந்தைகளில் சரிவு ஏற்பட்டது.
பங்குச்சந்தைகள் சரிவுடன் காணப்பட்ட போதிலும் சென்செக்ஸ் தொடர்ந்து 30,000 புள்ளிகள் என்ற அளவை தக்கவைத்துக் கொண்டுள்ளது. நிப்டியும் 9400 புள்ளிகள் என்ற அளவிலேயே இருந்து வருகிறது. வாரத்தின் இறுதி வர்த்தக நாளான இன்று (மே 12) வர்த்தக நேர இறுதியில் சென்செக்ஸ் 62.83 புள்ளிகள் சரிந்து 30,188.15 புள்ளிகளாகவும், நிப்டி 21.50 பள்ளிகள் சரிந்து 9400.90 புள்ளிகளாகவும் உள்ளன.
ஹச்டிஎப்சி, ஐடிசி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி உள்ளிட்ட வங்கித்துறை நிறுவன பங்குகள் கடுமையாக சரிந்தததும் பங்குச்சந்தைகளின் சரிவிற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்




|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|