பதிவு செய்த நாள்
13 மே2017
00:03
புதுடில்லி : டி.வி.எஸ்., மோட்டார் நிறுவனம், அதன் தயாரிப்புகளை, மத்திய அமெரிக்க நாடுகளில் விற்பனை செய்ய, கவுதமாலாவைச் சேர்ந்த, மாசேசா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.இதன்படி, டி.வி.எஸ்., நிறுவனத்தின் தயாரிப்புகளான, ஸ்கூட்டி செஸ்ட், விகோ, அப்பாச்சி பைக்குகள் மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்படும்.மாசேசா நிறுவனத்திற்கு, மத்திய அமெரிக்காவில், 500க்கும் மேற்பட்ட விற்பனை மையங்கள் உள்ளன. இதன் மூலம், கவுதமாலா, எல் சால்வடார், ஹோண்டுராஸ், கோஸ்டா ரிகா ஆகிய நாடுகளில், டி.வி.எஸ்., நிறுவனத்தின் தயாரிப்புகள், பரவலாக விற்பனை செய்யப்படும். மேலும், பிரத்யேக விற்பனை மையங்களும் அமைக்கப்படும்.
இது குறித்து, டி.வி.எஸ்., நிறுவனத்தின் சர்வதேச வர்த்தகத்தின் மூத்த துணைத் தலைவர், ஆர்.திலிப் கூறுகையில், ‘‘மாசேசா நிறுவனத்திற்கு, தனிச்சிறப்பு மிக்க விற்பனை மையங்கள் உள்ளதால், இந்த ஒப்பந்தத்தின் மூலம், நிறுவனத்தின் விற்பனை அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது,’’ என்றார். டி.வி.எஸ்., மொத்த வருவாயில், 22 சதவீதம் ஏற்றுமதி மூலம் கிடைப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|