பதிவு செய்த நாள்
14 மே2017
02:17

ஆமதாபாத் : ஐஸ் கிரீம் விற்பனையில் முன்னணியில் உள்ள, ஹேவ்மோர் நிறுவனத்தின் பங்குகளை வாங்க, நெஸ்லே, இந்துஸ்தான் யுனிலீவர் ஆர்வம் காட்டுகின்றன.குஜராத்தை சேர்ந்த ஹேவ்மோர் ஐஸ் கிரீம் நிறுவனம், 160 வகையான ஐஸ் கிரீம்களை விற்பனை செய்கிறது. இந்நிறுவனத்துக்கு சொந்தமாக, 20 உணவகங்கள், 200க்கும் மேற்பட்ட ஐஸ்கிரீம் பார்லர்கள் உள்ளன. குஜராத், ராஜஸ்தான், மஹாராஷ்டிரா, உ.பி., பஞ்சாப், கோவா, தெலுங்கானா, டில்லி, ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள, 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகளில், ஹேவ்மோரின் ஐஸ் கிரீம் விற்பனையாகிறது. தற்போது, இந்நிறுவனம், விரிவாக்க நடவடிக்கைக்காக நிதி திரட்ட உள்ளது.இதையடுத்து, இந்நிறுவனத்தின் பங்குகளை வாங்க, நெஸ்லே, இந்துஸ்தான் யுனிலீவர் ஆகியவை ஆர்வம் காட்டி வருகின்றன.இதுகுறித்து, ஹேவ்மோர் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:எங்கள் நிறுவனத்தின் விற்றுமுதல், 450 கோடி ரூபாயாக உள்ளது. தற்போது, நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு, 1,000 கோடி ரூபாய் என்றளவில் உள்ளது. நாட்டில், ஐஸ் கிரீம் சந்தையில், ஹேவ்மோரின் பங்கு, 3.5 சதவீதம். ஐஸ் கிரீம் ஆலையின் உற்பத்தித் திறனை, தினசரி, 2.50 லட்சம் லிட்டரில் இருந்து, 3.50 லட்சம் லிட்டராக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, 225 – 250 கோடி ரூபாய் செலவிடப்பட இருக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|