பதிவு செய்த நாள்
14 மே2017
02:20

பெங்களுரு : இந்திய ஐ.டி., துறையில் இரண்டாவது இடத்தில் உள்ள, இன்போசிஸ் நிறுவனம், அதன் ஊழியர்களுக்கான ஊதிய உயர்வை தள்ளி வைத்துள்ளது. மூத்த அதிகாரிகளுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்படவில்லை.அமெரிக்காவின் ‘எச் –1பி’ விசா கட்டுப்பாடு, ‘பிரெக்ஸிட்’ உள்ளிட்ட சர்வதேச பிரச்னைகளின் தாக்கம் போன்றவை, இந்திய ஐ.டி., நிறுவனங்களை பாதித்துள்ளன.இதன் காரணமாக, பல நிறுவனங்கள் ஆட்குறைப்பு உள்ளிட்ட சிக்கன நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.இந்த வகையில், இன்போசிஸ் நிறுவனமும், ஏராளமானோரை, உரிய இழப்பீடு வழங்கி, பணி நீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியானது. இது, இன்போசிஸ் ஊழியர்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில், இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி யு.பி.பிரவின்ராவ், அனைத்து பணியாளர்களுக்கும், நேற்று முன்தினம், மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.அதன் விபரம்:நிறுவனம், கடுமையான சூழலை எதிர்கொண்டுள்ளது. இதை சமாளிக்க, ஊழியர்களாகிய உங்களின் ஆதரவு தேவை. கடந்த நிதியாண்டு, நமக்கு மிகுந்த சவாலாக இருந்ததை நீங்கள் அறிந்திருப்பீர்கள். குறிப்பாக, நான்காம் காலாண்டில், நிறுவனத்தின் செயல்பாடுகள், மதிப்பீட்டை விட குறைவாக இருந்தது உங்களுக்கு தெரியும். ஒட்டுமொத்த ஐ.டி., துறையும், கடும் சவாலை சந்தித்து வருகிறது. நமக்கு மிக முக்கியமாக உள்ள சேவைகள் வர்த்தகத்தை, வணிகமயமாக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. இத்துடன், சர்வதேச அரசியல் நிலவரங்களும், நமது பாரம்பரிய வர்த்தகத்திற்கு இடையூறாக உள்ளன. இவற்றையெல்லாம், உங்கள் ஆதரவுடன் நிறுவனம் முறியடிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. மீண்டும் எழுச்சி பாதைக்கு திரும்ப, நாம் கடுமையாக உழைத்து வருகிறோம். இத்தகைய தருணத்தில், நிறுவனம், ஏராளமானோரை பணி நீக்கம் செய்ய உள்ளதாக கூறப்படும் ஊக செய்திகளுக்கு, முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறேன்.வழக்கமான நடைமுறைப்படி, ஊழியர்களின் செயல்பாடுகள் மதிப்பீடு செய்யப்பட்டு, சரிவர செயல்படாத சிலர் மட்டுமே பணியில் இருந்து விடுவிக்கப்படுவர்.இழப்பீட்டுடன் பணி நீக்கம் செய்யும் திட்டம் எதுவும் நிறுவனத்திடம் இல்லை. இத்தகைய சவாலான சூழலில், நிறுவனம், 1.70 லட்சம் இளநிலை ஊழியர்களுக்கான ஊதிய உயர்வை, ஏப்ரல் மாதத்தில் இருந்து, ஜூலைக்கு தள்ளி வைத்து உள்ளது.
பணியாளர்கள் பீதிஇன்போசிஸ், 30 ஆயிரம் மூத்த பணியாளர்களில், மூவாயிரத்திற்கும் அதிகமானோரை, ‘பணியில் அபிவிருத்தி தேவை’ என்ற பிரிவிற்கு மாற்றியுள்ளது.மேலும், பணி மேம்பாடு தொடர்பாக, மூவாயிரம் இளநிலை பணியாளர்களுக்கு நோட்டீஸ் கொடுத்துள்ளது. அதனால், நடப்பாண்டு, இன்போசிஸ் நிறுவனத்தில், ஆறாயிரம் பேர் பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி, பணியாளர்களிடம் பீதியை ஏற்படுத்தியுள்ளது.மூத்த அதிகாரிகள் குறித்து, அடுத்து வரும் காலாண்டுகளில் முடிவு செய்யப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|