பதிவு செய்த நாள்
15 மே2017
06:16

குறைந்த விலை, குறைவான வட்டி விகிதம், உயரும் வருமானம் மற்றும் அரசின் சலுகைகள் என பல்வேறு காரணங்களினால் சொந்த வீடு வாங்குவதற்கான சிறந்த தருணம் தற்போது நிலவுவதாக வல்லுனர்கள் கருதுகின்றனர்.
வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் குறைவாக இருக்கிறது. 2008ம் ஆண்டுக்கு பிறகு வட்டி விகிதம் இந்த அளவுக்கு குறைவாக இருந்ததில்லை என வல்லுனர்கள் கருதுகின்றனர். அண்மையில் ஸ்டேட் வங்கி, 30 லட்சம் ரூபாய் வரையிலான வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தை, 8.35 சதவீதமாக குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. வட்டி விகிதம் ஏற்கனவே குறைவானதாக இருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் வங்கிகளின் வட்டி விகிதம், 150 அடிப்படை புள்ளிகள் குறைந்திருக்கின்றன. வட்டி விகித குறைவு வாங்கும் சக்தியை அதிகமாக்கியுள்ளது. 100 அடிப்படை புள்ளி அளவிலான வட்டி குறைப்பு விலையில், 5 முதல் 6 சதவீத விலை குறைப்புக்கு வழிவகுக்கும் என்று கருதப்படுகிறது.
வட்டி விகித போக்கு இதை விட குறைவாக செல்லும் வாய்ப்பில்லை என்று கருதப்படுகிறது. மேலும் அண்மை காலங்களில் வீடுகளின் விலை உயராமல் இருப்பதால், விலையில் கரெக் ஷன் நிகழ வாய்ப்பிருப்பதாகவும் வல்லுனர்கள் கருதுகின்றனர். வாடிக்கையாளர்களுக்கு விலையில் தள்ளுபடி உள்ளிட்ட சலுகைகளும் கிடைக்க வாய்ப்புள்ளது. நொய்டா, மும்பை, கோல்கட்டா, பெங்களூரு, புனே, சென்னை உள்ளிட்ட நகரங்களில் நான்காம் காலாண்டில் வீடுகளின் விலை, 1.67 சதவீதம் குறைந்திருப்பதாக பிராப் ஈக்விட்டி நிறுவனம் தெரிவிக்கிறது.
பெரு நகரங்களில் பிரீமியம் குடியிருப்புகளுக்கான விலை கடந்த ஓராண்டாக உயராமல் தட்டையாக இருப்பதாக சர்வதேச புரோக்கரேஜ் நிறுவனமான, சி.எல்.எஸ்.ஏ., தெரிவிக்கிறது. அதே நேரத்தில் கடந்த மூன்றாண்டுகளில் வீடுகளின் விலை உயர்வை விட வருமான உயர்வு அதிகமாக இருப்பதாகவும், 2005ம் ஆண்டுக்குப் பிறகு வீடுகளை வாங்க கூடிய வசதி தற்போது மேம்பட்டிருப்பதாகவும், சி.எல்.எஸ்.ஏ., அறிக்கை தெரிவிக்கிறது. வீடு வாங்குபவர்களை பொருத்தவரை வீடு வாங்க இது உகந்த நேரமாக கருதலாம் என்கின்றனர். மேலும், அரசு அறிவித்துள்ள சலுகை திட்டங்களும் சாதகமான அம்சமாக அமைந்துள்ளன.
குறைந்த விலை பிரிவு வீடுகளுக்கு பட்ஜெட்டில் உள்கட்டமைப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதோடு, முதல் முறை வீடு வாங்குபவர்களுக்கான வட்டி மானியமும் அளிக்கப்படுகிறது. இதற்கான வருமான வரம்பும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனையடுத்து கட்டுமான நிறுவனங்களும் குறைந்த விலைப்பிரிவு வீடுகளில் அதிக கவனம் செலுத்த துவங்கியுள்ளன. இந்த அம்சங்களோடு, வீடு வாங்குபவர்களின் நலன் காக்கும் வகையிலான அம்சங்களை கொண்ட ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டமும் அமலுக்கு வந்துள்ளது. இது சாதகமான பல மாற்றங்களை கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|