தங்க ஆபரணங்கள் ஏற்றுமதி 4,200 கோடி டாலராக உயரும்தங்க ஆபரணங்கள் ஏற்றுமதி 4,200 கோடி டாலராக உயரும் ... இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு : 64.42 இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு : 64.42 ...
‘பாக்கெட்’ உணவு பொருட்கள் விற்பனைக்கு விரைவில் புதிய விதிமுறைகள் அறிமுகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 மே
2017
21:30

புதுடில்லி : ‘பாக்­கெட்’ உண­வு­களில் அடங்­கி­யுள்ள ஊட்­டச்­சத்­து­கள் குறித்து, நுகர்­வோர் எளி­தாக அறி­யும் வகை­யில், பாக்­கெட்­டின் வெளிப்­பு­றத்­தில், விளம்­ப­ரப்­ப­டுத்த வேண்­டும் என்­பது உள்­ளிட்ட புதிய விதி­மு­றை­கள், விரை­வில் அம­லுக்கு வர உள்ளன.

இந்­திய உணவு பாது­காப்பு மற்­றும் தர ஆய்வு ஆணை­ய­மான – எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., நாடு முழு­வ­தும் விற்­பனை செய்­யப்­படும் உண­வுப் பொருட்­களின் தரம் மற்­றும் பாது­காப்பு அம்­சங்­களை கண்­கா­ணித்து வரு­கிறது. இந்த அமைப்பு, பாக்­கெட்­டு­களில் அடைத்து விற்­கப்­படும், பதப்­ப­டுத்­திய உணவு வகை­கள் தொடர்­பான விதி­மு­றை­களை உரு­வாக்க, வல்­லு­னர் குழு ஒன்றை அமைத்­தி­ருந்­தது.

‘டிவி’ நிகழ்ச்சி
இக்­கு­ழு­வின் பரிந்­து­ரையை ஏற்று, பாக்­கெட் உண­வு­கள் குறித்த புதிய விதி­மு­றை­களை, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., விரை­வில் வெளி­யிட உள்­ளது. இது குறித்து, இந்த அமைப்­பின் தலைமை செயல் அதி­காரி பவன் குமார் அகர்­வால் கூறி­ய­தா­வது: வல்­லு­னர் குழு, பல்­வேறு பரிந்­து­ரை­களை அளித்­துள்­ளது. குறிப்­பாக, அதிக அள­விற்கு பதப்­ப­டுத்­தப்­படும் உண­வு­கள், சர்க்­கரை கலந்த குளிர்­பா­னங்­கள் ஆகி­ய­வற்­றுக்கு, கூடு­தல் வரி விதிக்க வலி­யு­றுத்தி உள்­ளது.

‘ஜங்க் புட்ஸ்’ எனப்­படும், நொறுக்­குத் தீனி­கள் குறித்து, குழந்­தை­க­ளுக்­கான, ‘டிவி’ சேனல் அல்­லது அவர்­க­ளுக்­கான, ‘டிவி’ நிகழ்ச்­சி­களின் நடுவே விளம்­ப­ரப்­ப­டுத்­தக் கூடாது என­வும் தெரி­வித்­து உள்­ளது. உண­வுப் பொருட்­கள் அடங்­கிய பாக்­கெட் மீது, உள்ளே அடைக்­கப்­பட்­டுள்ள உண­வின் மொத்த கலோ­ரி­கள், கார்­போ­ஹைட்­ரேட், சர்க்­கரை, கொழுப்பு, புர­தம், சோடியம், நார் சத்து உள்­ளிட்ட விப­ரங்­களை, கண்­டிப்­பாக அச்­சிட வேண்­டும் என, குழு பரிந்­து­ரைத்து உள்­ளது.

புகார்
குறிப்­பாக, உண­வுப் பொரு­ளில், ‘டிரான்ஸ் – பேட்’ எனப்­படும், பதப்­ப­டுத்­தும் போது, எண்­ணெய் திட­மா­வ­தால் உரு­வா­கும் கொழுப்­பின் அளவை, கண்­டிப்­பாக குறிப்­பிட வேண்­டும் என, வல்­லு­னர்­கள் தெரி­வித்து உள்­ள­னர். அதன் அடிப்­ப­டை­யில், விதி­மு­றை­கள் உரு­வாக்­கப்­பட்டு உள்ளன. இது குறித்த அறி­விப்பு விரை­வில் வெளி­யா­கும். வீடு, அலு­வ­ல­கம், பொது இடம், வழி­பாட்டு தலம் உள்­ளிட்ட அனைத்து இடங்­க­ளி­லும், மக்­க­ளுக்கு பாது­காப்­பான, ஊட்­டச்­சத்­துள்ள உண­வு­கள் கிடைக்க, நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டு வரு­கிறது. உண­வுப் பொருட்­கள் குறித்து, நுகர்­வோ­ரி­டம் விழிப்­பு­ணர்வை அதி­க­ரிக்­க­வும், புகார்­க­ளுக்கு உட­ன­டி­யாக தீர்வு காண்­ப­தற்­கும் முக்­கி­யத்­து­வம் அளித்து வரு­கி­றோம். இவ்­வாறு அவர் கூறி­னார்.

பயிற்சி பெற்ற, குறைந்­த­பட்­சம் ஒரு மேற்­பார்­வை­யா­ளர் முன்­னி­லை­யில், உணவு வகை­கள் தயா­ரிப்­பதை கட்­டா­ய­மாக்க, மத்­திய அரசு திட்­ட­மிட்டு உள்­ளது. இதை­யொட்டி, பாது­காப்­பான உணவு தயா­ரிப்பு குறித்த சான்­றி­தழ் பயிற்சி திட்­டத்தை, விரை­வில் அறி­மு­கப்­ப­டுத்த உள்­ளோம். வலை­த­ளம் மூல­மா­க­வும், தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட மையங்­க­ளி­லும், இப்­ப­யிற்­சியை பெற­லாம். நாடு முழு­வ­தும் இத்­திட்­டத்தை, தனி­யா­ரு­டன் செயல்­ப­டுத்த முடிவு செய்­துள்­ளோம்.
-பவன் குமார் அகர்­வால், தலைமை செயல் அதி­காரி, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.,

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)