அபெக்ஸ் புரோசன் புட்ஸ் நிறுவனம் பங்கு வெளியீட்டுக்கு ‘செபி’ அனுமதிஅபெக்ஸ் புரோசன் புட்ஸ் நிறுவனம் பங்கு வெளியீட்டுக்கு ‘செபி’ அனுமதி ... இந்தியாவில் கார் விற்பனை நிறுத்தம் ஜெனரல் மோட்டார்ஸ் அறிவிப்பு இந்தியாவில் கார் விற்பனை நிறுத்தம் ஜெனரல் மோட்டார்ஸ் அறிவிப்பு ...
எச்சரிக்கையை மீறி பெருகுது ‘பிட்காய்ன்’ பயன்பாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 மே
2017
02:21

மும்பை : ‘வலை­த­ளங்­களில் புழங்­கும், ‘பிட்­காய்ன்’ எனப்­படும், மெய்­நி­கர் கரன்­சி­கள், சட்­ட­பூர்­வ­மா­னவை அல்ல’ என, ரிசர்வ் வங்கி எச்­ச­ரித்த போதி­லும், இந்­தி­யா­வில், அதை பயன்­ப­டுத்­து­வோர் எண்­ணிக்கை கிடு­கி­டு­வென பெருகி வரு­வ­தாக, அதிர்ச்சி தக­வல் வெளி­யாகி உள்­ளது.மஹின் குப்தா என்­ப­வர், இரு நண்­பர்­க­ளு­டன் இணைந்து, பிட்­காய்ன் வர்த்­த­கத்­திற்­கென, 2012ல், ‘பை செல் பிட்­காய்ன்’ என்ற நிறு­வ­னத்தை, சிங்­கப்­பூ­ரில் துவக்­கி­னார். இதை­ய­டுத்து, 2015ல், ‘ஸெப்போ’ என்ற பெய­ரில், இந்­தி­யா­வில், பிட்­காய்ன் வர்த்­த­கத்தை அறி­மு­கப்­ப­டுத்­தி­னார்.தற்­போது, ஸெப்போ, இந்­தி­யாவில் முதன்­மு­த­லாக துவங்­கப்­பட்ட, ‘மொபைல் ஆப்’ சார்ந்த, பிட்­காய்ன் சந்­தை­யாக திகழ்­கிறது. இந்த, ‘ஆப்’பை, தின­மும், 2,500க்கும் அதி­க­மா­னோர் பதி­வி­றக்கி, பிட்­காய்ன் வர்த்­த­கத்­தில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர்.‘‘இந்­தி­யா­வில், 5 லட்­சத்­திற்­கும் மேற்­பட்­டோர் இந்த, ‘ஆப்’பை பயன்­ப­டுத்தி, பிட்­காய்ன் வர்த்­த­கத்­தில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர். வரும் செப்­டம்­ப­ருக்­குள், இந்த எண்­ணிக்கை, 10 லட்­ச­மாக உய­ரும் என, எதிர்­பார்க்­கி­றோம்,’’ என, ஸெப்போ நிறு­வ­னத்­தின் தலைமை செயல்­பாட்டு அதி­காரி சந்­தீப் கோயங்கா தெரி­வித்து உள்­ளார்.பிட்­காய்ன், சட்­ட­பூர்வ கரன்சி அல்ல; பிட்­காய்ன் வைத்­தி­ருப்­போர், முத­லீட்­டா­ளர் அல்­லது வர்த்­த­கத்­தில் ஈடு­ப­டு­வோர் அனை­வ­ரும், அவர்­களின் சொந்த பொறுப்­பி­லேயே செயல்­ப­டு­வ­தாக கரு­தப்­ப­டு­வர் என, ரிசர்வ் வங்கி எச்­ச­ரித்­துள்­ளது.அதை­யும் மீறி, இந்­தி­யா­வில் ஏரா­ள­மா­னோர், பிட்­காய்ன் வர்த்­த­கத்­தில் ஈடு­பட்டு வரு­வது அதிர்ச்சி அளிப்­ப­தாக, நிதி வல்­லு­னர்­கள் தெரி­வித்து உள்­ள­னர். பிட்­காய்ன் தொடர்­பான கொள்கை அறி­விப்பை, மத்­திய அரசு விரை­வில் வெளி­யிட உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)