மலிவு விலை எல்.இ.டி., பல்பு, பெட்ரோல் ‘பங்க்’கில் விற்பனைமலிவு விலை எல்.இ.டி., பல்பு, பெட்ரோல் ‘பங்க்’கில் விற்பனை ... சிறிய, நடுத்தர நிறுவனங்கள் வளர்ச்சிக்குஒருங்கிணைந்த தொழில் கொள்கை தேவை :‘அசோசெம்’ அமைப்பு வலியுறுத்தல் சிறிய, நடுத்தர நிறுவனங்கள் வளர்ச்சிக்குஒருங்கிணைந்த தொழில் கொள்கை தேவை ... ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
பாரத ஸ்டேட் வங்கிநிகர லாபம் ரூ.2,815 கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மே
2017
07:18

புதுடில்லி:பொதுத் துறை­யைச் சேர்ந்த, பாரத ஸ்டேட் வங்கி, கடந்த மார்ச்­சு­டன் முடி­வ­டைந்த நான்­கா­வது காலாண்­டில், 2,814.82 கோடி ரூபாயை, நிகர லாப­மாக ஈட்­டி­யுள்­ளது. இது, முந்­தைய ஆண்­டின் இதே காலாண்­டில், 1,263.81 கோடி ரூபா­யாக குறைந்­தி­ருந்­தது. இதே காலாண்­டு­களில், அந்த வங்­கி­யின் தனிப்­பட்ட மொத்த வரு­வாய், 7.8 சத­வீ­தம் உயர்ந்து, 53 ஆயி­ரத்து, 526.97 கோடி ரூபா­யில் இருந்து, 57 ஆயி­ரத்து, 720 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது. கடந்த காலாண்­டில், எஸ்.பி.ஐ.,யின் மொத்த நிகர வாராக்­க­டன், 6.5 சத­வீ­தத்­தில் இருந்து, 6.9 சத­வீ­த­மாக உயர்ந்­துள்­ளது. இதே காலத்­தில், நிகர வாராக்­க­டன், 3.81 சத­வீ­தத்­தில் இருந்து, 3.71 சத­வீ­த­மாக குறைந்­துள்­ளது.
கடந்த, 2017ம் முழு நிதி­யாண்­டில், வங்­கி­யின் மொத்த வரு­வாய், 9.2 சத­வீ­தம் உயர்ந்து, 2,98,640.45 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது. இது, முந்­தைய ஆண்­டில், 2,73,461.13 கோடி ரூபா­யாக குறைந்­தி­ருந்­தது.கரூர் வைஸ்யா வங்கி வருவாய் ரூ.1,665 கோடி சென்னை:தனி­யார் துறை­யைச் சேர்ந்த, கரூர் வைஸ்யா வங்கி, கடந்த மார்ச்­சு­டன் முடி­வ­டைந்த காலாண்­டில், 217.56 கோடி ரூபாயை, நிகர லாப­மாக ஈட்­டி­உள்­ளது. இது, முந்­தைய ஆண்­டின் இதே காலாண்­டில், 138 கோடி ரூபா­யாக குறைந்­தி­ருந்­தது. இதே காலாண்­டு­களில், இந்த வங்­கி­யின் மொத்த செயல்­பாட்டு வரு­வாய், 1,536.30 கோடி ரூபா­யில் இருந்து, 1,665.23 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது.
கடந்த முழு நிதி­யாண்­டில், இந்த வங்­கி­யின் நிகர லாபம், 6.75 சத­வீ­தம் உயர்ந்து, 605.98 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது. இது, முந்­தைய ஆண்­டில், 567.63 கோடி ரூபா­யாக குறைந்­தி­ருந்­தது. இதே காலத்­தில், மொத்த செயல்­பாட்டு வரு­வாய், 6,150.21 கோடி ரூபா­யில் இருந்து, 6,404.57 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது.கடந்த முழு நிதி­யாண்­டில், கரூர் வைஸ்யா வங்­கி­யின் மொத்த வணி­கம், 89 ஆயி­ரத்து, 555 கோடி ரூபா­யில் இருந்து, 95 ஆயி­ரத்து, 135 கோடி ரூபா­யாக உயர்ந்­துள்­ளது.
அதில், வங்கி திரட்­டிய டிபா­சிட், 50 ஆயி­ரத்து, 79 கோடி ரூபா­யில் இருந்து, 53 ஆயி­ரத்து, 700 கோடி ரூபா­யாக உயர்ந்­துள்­ளது. வழங்­கிய கடன்­கள், 39 ஆயி­ரத்து, 476 கோடி ரூபா­யில் இருந்து, 41 ஆயி­ரத்து, 435 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)