இந்தியாவில் ஐபோன் விற்பனை ஆப்பிளின் சோதனை முயற்சிஇந்தியாவில் ஐபோன் விற்பனை ஆப்பிளின் சோதனை முயற்சி ... 200 ஸ்டோர்கள் துவக்க ஸ்டார் பஜார் இலக்கு 200 ஸ்டோர்கள் துவக்க ஸ்டார் பஜார் இலக்கு ...
பங்கு வெளியீட்டுக்கு வருகிறது டிக்சான் டெக்னாலஜிஸ் நிறுவனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 மே
2017
07:10

புதுடில்லி: டிக்சான் டெக்னாலஜிஸ் நிறு வனம், நுகர்வோர் பயன்படுத்தும் மின் சாதனங்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. ந்நிறுவனம், விரிவாக்க நடவடிக்கையில் ஈடுபட உள்ளது. இதற்காக, பங்குச் சந்தைகளில் பங்குகளை வெளியிட்டு, 650 கோடி ரூபாய்க்கு நிதி திரட்ட திட்டமிட்டு உள்ளது. இதன் பங்கு வெளியீட்டு பணிகளை, ஐ.டி.எப்.சி., வங்கி, ஐ.ஐ.எப்.எல்., ஹோல்டிங்ஸ், மோதிலால் ஆஸ்வால் இன்வெஸ்ட்மென்ட், யெஸ் செக்யூரிட்டீஸ் ஆகியவை மேற்கொள்ள உள்ளன.இது குறித்து, இந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது: எங்கள் நிறுவனம், ஆந்திர மாநிலம், திருப்பதியில், எல்.இ.டி., ‘டிவி’ உற்பத்தி செய்யும் ஆலையை அமைக்க உள்ளது. தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பை வலுப் படுத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இவற்றுக்கு தேவையான நிதியை, பங்குச் சந்தையில் பங்குகளை வெளியிட்டு திரட்ட உள்ளது. பங்கு வெளியீட்டுக்கு அனுமதி கேட்டு, ‘செபி’யிடம் வரைவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அவ்வாறு திரட்டப்படும் நிதி, விரிவாக்க திட்டங்களுடன், நிறுவனம் வாங்கிய கடன்களை திரும்ப செலுத்தவும் பயன்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
கார் வாங்கும் எண்ணம்புதிதாக நுழைவு நிலை கார் வாங்குவது அல்லது இருக்கும் காரை மேம்படுத்துவது போன்ற ... மேலும்
business news
வளமான எதிர்காலத்திற்கு திட்டமிட்டு முதலீடு செய்வது அவசியம். சரியான முதலீடு சாதனங்களை தேர்வு செய்வதோடு, ... மேலும்
business news
வட்டி விகித உயர்வு, கட்டுமான பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட அம்சங்களை மீறி, ரியல் வீடுகளுக்கான தேவை ... மேலும்
business news
பொதுவாக, 60 வயது முதல் 80 வரையான மூத்த குடிமக்களுக்கான வருமான வரிச் சலுகைகள் குறித்து விளக்கவும். ... மேலும்
business news
புதுடில்லி:உணவு வினியோகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனமான ஸ்விக்கி, உணவக தொழில்நுட்ப நிறுவனமான ‘டைன் அவுட்’ ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)