வியட்நாமில் ஆர்.சி.இ.பி., மாநாடு இந்தியா உட்பட 16 நாடுகள் பங்கேற்புவியட்நாமில் ஆர்.சி.இ.பி., மாநாடு இந்தியா உட்பட 16 நாடுகள் பங்கேற்பு ... ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.64.49 ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.64.49 ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
பிள்ளைகளின் கல்­வி செலவுக்கு திட்­ட­மி­டு­வது எப்­படி?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 மே
2017
07:35

பண­வீக்கம் மற்றும் ஆண்­டு­தோறும் அதி­க­ரிக்கும் செலவு உள்­ளிட்ட அம்­சங்­களை, மனதில் கொண்டு, பிள்­ளை­களின் எதிர்­கால கல்வி செல­வுக்கு திட்­ட­மிட வேண்டும்.

உயர்­கல்­வியின் முக்­கி­யத்­துவத்தை எல்­லா­ருமே அறிந்­து இ­ருக்­கின்­றனர். எதிர்­கா­லத்தில் பிள்­ளை­க­ளுக்கு சிறந்த முறையில் உயர்­கல்வி வழங்க வேண்டும் என்றே பெற்றோர் விரும்­பு­கின்றனர். ஆனால், உயர்­கல்­வியின் முக்­கி­யத்­து­வத்தை உணர்ந்­து இ­ருந்தால் மட்டும் போதாது, அதற்கு சரி­யான முறையில் திட்­ட­மி­டவும் வேண்டும். எப்­படி மற்ற இலக்­கு­க­ளுக்­காக திட்­ட­மிட்டு சேமிப்­பதும், முத­லீடு செய்­வதும் முக்­கி­ய­மா­னதோ அதே போல உயர்­கல்­விக்­கான செல­வு­களை சமா­ளிக்­கவும் திட்­ட­மிட்டு செயல்­பட வேண்­டி­யது அவ­சியம் என, நிதி வல்­லு­னர்கள் வலி­யு­றுத்­து­கின்­றனர். உயர்­கல்­விக்­கான திட்­ட­மிடல் என்று வரும் போது, முன்­கூட்­டியே திட்­ட­மிடத் துவங்­கு­வது, அதன்­படி தொடர்ந்து விடாமல் முத­லீடு செய்­து வரு­வதும் முக்­கியம்.

ஏன் முக்­கியம்?பொது­வாக, ஏழு முதல் எட்டு ஆண்­டு கால அவ­கா­சத்தில், திட்­ட­மி­டலை துவங்கி சேமிப்­பது நல்­லது என்­கின்­றனர். முன்­கூட்­டியே திட்­ட­மி­டலை துவக்­கு­வ­தற்கு, இரண்டு முக்­கிய கார­ணங்­களை வல்­லு­னர்கள் முன்­வைக்­கின்­றனர். ஒன்று பண­வீக்கம். மற்­றொன்று ஆண்­டு­தோறும் அதி­க­ரிக்கும் செலவு. பெற்றோர் மேற்­ப­டிப்­பிற்­கான செலவை மனதில் கொள்ளும் போது தற்­போ­தையை நிலை­யையே அள­வு­கோ­லாக கொள்­கின்­றனர். ஆனால், சில ஆண்­டுகள் கழித்து பண­வீக்­கத்தின் தாக்கம் கார­ண­மாக தேவைப்­படும் தொகை அதி­க­மாக இருக்கும் என்­பதை உணர வேண்டும். மேலும், ஆண்­டு­தோறும் அதி­க­ரிக்கும் செலவு கார­ண­மாக கல்­விக்­ கட்­ட­ணமும் அதி­க­ரித்து வரும். எனவே, மேற்­ப­டிப்பு காலத்தில், எதிர்­பார்த்­ததை விட கூடு­த­லாக தொகை தேவைப்­ப­டலாம். இதற்கு ஈடு கொடுக்க வேண்டும் எனில் திட்­ட­மிட்டு சேமிப்­பதே சிறந்த வழி!

எவ்வளவு தேவை?உயர்­கல்­விக்­காக திட்­ட­மி­டு­வதில் உள்ள மிகப்­பெ­ரிய பிரச்னை, எவ்­வ­ளவு தொகை தேவை என, துல்­லி­ய­மாக கணிப்­பது கடி­ன­மான விஷ­ய­மாகும். எதிர்­கா­லத்தில் பிள்­ளைகள் எந்த துறையில் வேண்­டு­மா­னாலும் மேற்­ப­டிப்பை தேர்வு செய்ய விரும்­பலாம். இதை மனதில் கொண்டு, எந்த வித­மான கல்­வியை அளிக்க விரும்­பு­கிறோம் என்­பதை தீர்­மா­னித்­துக்­கொண்டு தேவைப்­ப­டக்­கூ­டிய அடிப்­படை தொகையை நிர்­ண­யித்­துக்­கொண்டு அதற்­கேற்ப சேமிக்க வேண்டும். ஒரு சில ஆண்­டு­க­ளுக்குப் பின், பிள்­ளை­களின் ஆர்வம் செல்லும் திசையை இன்னும் தெளி­வாக அறிந்து கொள்ள முடியும். உதா­ர­ண­மாக தொழில் முறை­யி­லான மேற்­ப­டிப்பு எனில், அதற்­கேற்ப அடிப்­படை தொகை அமையும். அடிப்­படை தொகையை தீர்­மா­னித்­தப்பின், பண­வீக்கம் மற்றும் ஆண்­டு­தோறும் உயரும் செல­வுக்­கான தொகை­யையும் சேர்த்­துக்­கொள்ள வேண்டும். முன்­கூட்­டியே திட்­ட­மி­டலை துவங்­கிய பின்னர் தேவைக்­கேற்ப அதை மேம்­ப­டுத்­திக்­கொள்­வது சாத்­தியம்.

பல பெற்றோர் தாம­த­மாக திட்­ட­மி­ட­லையும், சேமிப்­பையும் துவக்­கு­வது போலவே, தவ­றான முத­லீட்டு சாத­னங்­களை நாடு­வ­தா­கவும் வல்­லு­னர்கள் கரு­து­கின்­றனர். பொருத்­த­மில்­லாத முத­லீ­டுகள் எதிர்­பார்த்த பலனை அளிக்­காமல் போவ­தோடு செலவு மிக்­க­தா­கவும் அமைந்­து­வி­டலாம். எனவே, சரி­யான முத­லீட்டு வழி­களை தேர்வு செய்து முத­லீடு செய்ய வேண்டும். உயர்­கல்வி என்­பது மிகவும் முக்­கி­ய­மான நிதி இலக்கு என்­பதால், முத­லீடு பாது­காப்­பாக இருக்க வேண்­டி­யது அவ­சியம். அதே நேரத்தில் அவை அதிக பலன் தரக் கூடியவையாகவும் இருக்க வேண்டும்.

முத­லீட்டு சாத­னங்கள்அப்­போது தான், பண­வீக்கம் மற்றும் அதி­க­ரிக்கும் செல­வுக்கு ஈடுசெய்ய முடியும். சம­பங்கு மற்றும் பேலன்ஸ்டு மியுச்­சுவல் பண்ட் திட்­டங்­களில் முத­லீடு செய்தால் பண­வீக்­கத்தை ஈடு செய்­யலாம் என்­கின்­றனர். அதே நேரத்தில் தொடர்ந்து முத­லீடு செய்­வதன் மூலம் சந்­தையின் ஏற்ற, இறக்­கங்­க­ளையும் தாக்­குப்­பி­டித்து பலன் பெறலாம். முத­லீட்டு சாத­னங்­களை தேர்வு செய்­வதில், இலக்கை அடைய கைவசம் உள்ள காலத்­திற்கு ஏற்­பவும் அமையும். சில ஆண்­டுகள் மட்­டுமே உள்ள நிலையில் சேமிக்கத் துவங்கும் போது அதிக அளவில் ரிஸ்க் எடுக்க முடி­யாது. அதற்­கேற்ற முத­லீ­டு­களே நாட வேண்டும். மாறாக, 8 ஆண்­டு­க­ளுக்கு மேல் அவ­காசம் இருந்தால், மேலும் சிறப்­பாக திட்­ட­மிட முடியும். உயர்­கல்வி செலவை இலக்­காக கொண்டு திட்­ட­மி­டு­வதன் மூலம், கல்­விக்­கடன் வச­தியை நாடு­வ­தற்­கான தேவை­யையும் குறைக்க முடியும்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)