வியட்நாமில் ஆர்.சி.இ.பி., மாநாடு இந்தியா உட்பட 16 நாடுகள் பங்கேற்புவியட்நாமில் ஆர்.சி.இ.பி., மாநாடு இந்தியா உட்பட 16 நாடுகள் பங்கேற்பு ... ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.64.49 ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.64.49 ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
கமா­டிட்டி சந்தை: முருகேஷ் குமார்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 மே
2017
07:39

கச்சா எண்ணெய்
சர்­வ­தேச சந்­தையில், கச்சா எண்ணெய் விலை, கடந்த வாரம் உயர்ந்து, 50 டாலர் என்ற அளவில் வர்த்­த­க­மா­னது. ஒபெக் நாடு­களின் கூட்­ட­மைப்பு, வரும் 25ம் தேதி, வியன்னா நக­ரத்தில் ஒன்­று­கூடி, தங்­க­ளது உற்­பத்தி குறைப்பு நட­வ­டிக்கை வரும் ஜூனில் முடி­வ­டை­வதால், அதை மேலும் ஆறு மாதங்கள் நீட்­டிக்க வாய்ப்பு இருக்கும் என கரு­தி­யதன் கார­ண­மா­கவும், இந்த விலை­யேற்றம் நிகழ்ந்­தது. மேலும் வாரம் ஒரு­முறை வெளி­வரும், இ.ஐ.ஏ., இருப்பு அளவு எதிர்­பார்ப்பை விட அதி­க­மாக குறைந்­ததால், சந்­தையில் எண்ணெய் விலை சிறிது உயர்வை கண்­டது. ஏ.பி.ஐ., எனப்­படும், அமெ­ரிக்க பெட்­ரோ­லியம் இன்ஸ்ட்­டி­டியூட், கடந்த வியாழன் அன்று வெளி­யிட்ட அறிக்­கையில், ’டிரைவிங் சீசன் துவங்­கி­யது. இதன் கார­ண­மாக பெட்ரோல் டீசல் தேவை அதி­க­ரிக்கும்’ என்ற தக­வலை வெளி­யிட்­டது. மேலும் சவுதி அரே­பியா கடந்த ஒன்­பது மாதங்­க­ளாக குறை­வான உற்­பத்­தியை மேற்­கொண்டு வரு­கி­றது. அல்­ஜீ­ரியா நாட்டின் உற்­பத்தி தினமும் 55 ஆயிரம் பீப்பாய் குறைக்­கப்­பட்­டது. சந்­தையில் அமெ­ரிக்க நாண­யத்தின் வீழ்ச்சி கார­ண­மாக, பொருள் வாணி­பத்தில் சரக்­குகள் விலை­யேற்றம் காணப்­பட்­டது. வரும் நாட்­களில் கச்சா எண்ணெய் விலை 52.50 டாலர் வரை உயரக் கூடும் நிலையில், அதன் தாங்கு விலை, 49.50 டாலர் ஆகும்.

பொருள் வணிக முன்­பேர சந்­தையின் அள­வுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) (ஜூன்) 3250 3205 3295 3350என்.ஒய்.எம்.இ.எக்ஸ். (டாலர்) 49.50 47.80 51.80 53.00

தங்கம், வெள்ளி
தொடர்ச்­சி­யான நான்கு வார விலை சரி­வுக்கு பின், கடந்த வாரம் தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்ந்து வர்த்­த­க­மா­னது. தங்கம் 5 சத­வீதம் மற்றும் வெள்ளி 3 சத­வீதம் உயர்ந்­தது. கடந்த வாரம் பெரும்­பா­லான நாடு­களின் பங்கு வர்த்­தகம் சரிவை சந்­தித்­தது. இதன் கார­ண­மாக, முத­லீட்­டா­ளர்­களின் தங்கம் மீதான முத­லீட்டு ஆர்வம் அதி­ரித்­தது. மேலும், அமெ­ரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அரசின் நிர்­வா­கத்தின் மீதான நம்­பிக்கை குறித்து கேள்வி எழுந்­துள்­ளது. அதா­வது, அவரின் முடி­வான வரி­கு­றைப்பு மற்றும் கட்­டு­மா­னத்­து­றையில் அதி­க­மான செல­வீட்டு தொகை ஒதுக்­கீடு போன்­ற­வற்றில் சரி­யான போக்கு காணப்­ப­ட­வில்லை என்ற அச்சம் உயர்ந்­துள்­ளது. இதன் விளை­வாக, வார இறுதி நாட்­களில், யு.எஸ்.டி., இன்டெக்ஸ் எனப்­படும் அமெ­ரிக்க நாணய குறி­யீட்டு எண் கடும் சரிவை சந்­தித்­தது. இதுவே தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்­வுக்கு வழி­வ­குத்­தது.வரும் நாட்­களில், சர்­வ­தேச சந்­தை­களில் தங்­கத்தின் வியா­பா­ர­மா­னது, 1270 1245 டாலர் என்ற நிலையில் இருக்கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. இதை கடக்கும் நிலையில், 1292 1238 டால­ராக இருக்கும். வெள்ளி விலை 17.40 16.50 டாலர் வியா­பார நிலை ஆகும்.

தங்கம்
பொருள் வணிக முன்­பேர சந்­தையின் அள­வுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) (ஜூன்) 28,450 28,100 28,800 29,050காம்எக்ஸ் (டாலர்) 1242 1,230 1,265 1,290
வெள்ளிபொருள் வணிக முன்­பேர சந்­தையின் அள­வுகள் (மே 17)சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) (ஜூலை) 38,800 38,380 39,450 39,900காம்எக்ஸ் (டாலர்) 16.80 16.00 17.15 18.00

செம்பு
செம்பு விலை கடந்த வாரம் உயர்ந்து காணப்­பட்­டது. பங்கு வர்த்­தகம் உயர்வு, மற்றும் சீனாவின் தேவை கூடும் என்ற கணிப்பு போன்­றவை, செம்பின் விலைக்கு சாத­க­மாக அமைந்­தன.கடந்த வாரங்­களில் வெளி­வந்த, அமெ­ரிக்க நாட்டின் பொரு­ளா­தார கார­ணி­க­ளான புதிய மற்றும் பழைய வீடு­களின் விற்­பனை, வேலை இல்­லா­தோ­ருக்­கான ஊக்க தொகை எண்­ணிக்கை குறைவு மற்றும் புதி­தாக வேலைக்கு சேர்ந்தோர் எண்­ணிக்கை அதிகம் போன்­றவை பொரு­ளா­தார வளர்ச்சிப் பாதையில் வெளி­வந்­ததால், செம்பு போன்ற தொழிற்­சாலை இடு­பொ­ருட்­களின் தேவை அதி­க­ரிக்க கூடும் என்ற எதிர்­பார்ப்பில் விலை உயர்ந்­தது. வரும் நாட்­களில் இந்த விலை உயர்வு கணி­ச­மாக உயரக் கூடும்.
பொருள் வணிக முன்­பேர சந்­தையின் அள­வுகள் (ஜூன் 17)சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 366.50 363 371 375

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)