வியட்நாமில் ஆர்.சி.இ.பி., மாநாடு இந்தியா உட்பட 16 நாடுகள் பங்கேற்புவியட்நாமில் ஆர்.சி.இ.பி., மாநாடு இந்தியா உட்பட 16 நாடுகள் பங்கேற்பு ... ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.64.49 ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.64.49 ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
சந்­தையின் அடுத்த நிலையும் அடிப்­படை பொரு­ளா­தார மாற்­றங்­களும்..: ஷ்யாம் சேகர், முதலீட்டு ஆலோசகர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 மே
2017
07:42

தொடர்ந்து பல வாரங்­க­ளாக புதிய உச்­சங்­களை தொட்ட இந்­திய சந்தை, இந்த வார இறு­தியில் தெளி­வாக தொய்­வுற்­றது.

இந்த தொய்­விற்கு கார­ணங்கள் பல உண்டு. இந்­திய சந்தை, உலக சந்­தை­யோடு ஒருங்­கி­ணைந்­தது என்­பது ஒரு முக்­கிய காரணம். அமெ­ரிக்­காவில், டிரம்ப் ஆட்சி அமைந்த பிறகு, அந்த நாட்டு சந்தை கண்ட தொடர் ஏற்றம் நிறை­வுக்கு வரும் நேரத்தில், அந்த தாக்கம் உலக சந்­தையில் தொய்வை ஏற்­ப­டுத்தும். இதன் வெளிப்­பாடு, ஒவ்­வொரு நாட்டு சந்­தை­யிலும் ஒவ்­வொரு வித­மாக அமையும். அந்­தந்த நாட்டு பொரு­ளா­தார சூழ­லுக்கு ஏற்ப, சந்­தை­களின் மாற்­றங்கள் அமையும். ஒரு­வேளை, டிரம்ப் அரசு மேலும் அர­சியல் சிக்­கல்­களைச் சந்­தித்தால், அந்த தாக்­கமும் அனைத்து நாடு­களின் சந்­தை­க­ளையும் பாதிக்கும். எல்லா நாடு­க­ளிலும் சந்தை ஏற்றம் கண்ட நிலை தொடர்ந்து நிலைக்­காது. ஒவ்­வொரு நாட்டு சூழ­லுக்கு ஏற்ப, அந்த நாட்டு சந்தை மாற்­றங்கள் இனி அமையும்.

இந்­தி­யாவைப் பொறுத்­த­வரை, நம் சந்­தையின் முக்­கிய கவ­லைகள் வங்கி கடன் மீட்பு மற்றும் உற்­பத்தி வளர்ச்சி. வாராக் கடன்­களை திரும்ப பெற, பொதுத் துறை வங்­கிகள் எடுக்கும் முயற்­சிகள் வெற்­றி­பெற வேண்டும். அந்த முயற்­சி­களில் ஏற்­படும் முன்­னேற்­றங்கள், சந்­தையின் கவ­னத்தை தொடர்ந்து ஈர்த்து வரு­கின்­றன. இந்த முன்­னேற்­றங்கள் மித வேகத்தில் மட்­டுமே நகர்ந்­தாலும், நிறை­வான மாற்­றங்­களை ஏற்­ப­டுத்த வேண்டும். அந்த மாற்­றங்கள் இந்த நிதி­யாண்­டுக்குள் தெளி­வாக தென்­பட வேண்டும். வங்­கி­களின் நிலை முன்­னேற வேண்­டிய அதே சூழலில், நிறு­வ­னங்கள் தங்கள் உற்­பத்தி கொள்­ள­ளவை அதி­கப்­ப­டுத்த தேவை­யான முத­லீ­டு­களை செய்ய முன்­வர வேண்டும். நம் பொரு­ளா­தார வளர்ச்சி பெருக இந்த முத­லீ­டுகள் மிக அவ­சியம்.

உள்­நாட்டு நுகர்வு தொடர்ந்து வளர்ச்சி காண வேண்டும். சமீ­ப­ஆண்­டு­களில், இறக்­கு­ம­திக்குப் பதி­லாக, உள்­நாட்டு உற்­பத்தி மூலம் நம் தேவை­களை நிறைவு செய்யும் முயற்­சிகள் அரசால் எடுக்­கப்­பட்­டன. இந்த முயற்­சிகள் பல முக்­கிய உற்­பத்தி துறை­களில் நெடுங்­கால மாற்­றங்­களை ஏற்­ப­டுத்த வேண்டும். பல ஆண்­டு­க­ளாக பொரு­ளா­தார வளர்ச்­சியின் துாண்­க­ளாக ஏற்­று­மதி மற்றும் உள்­நாட்டு நுகர்­வுகள் அமைந்­தன. இனி வரும் ஆண்­டு­களில், இறக்­கு­ம­திக்கு மாற்று ஏற்­ப­டுத்­து­வதே நம் முக்­கிய குறிக்­கோ­ளாக அமையும். விவ­சாய உற்­பத்தி, மின் உற்­பத்தி, நிலக்­கரி உற்­பத்தி, ஜவுளி உற்­பத்தி மற்றும் உருக்கு உற்­பத்­தியில் தொடர்ந்து பெரு­வ­ளர்ச்சி காண வேண்டும். இதுவே வங்கி துறை சார்ந்த சிக்­கல்­க­ளையும் தீர்த்து வைக்கும்.

உல­க­ளவில் இந்­தியா பல துறை­களில் முக்­கிய உற்­பத்­தி­யா­ள­ரா­கவும், மிக குறைந்த விலையில் உற்­பத்தி செய்யும் திறன் கொண்ட நாடா­கவும் இடம் பிடிக்க வேண்டும். அடிப்­படை பொரு­ளா­தார மாற்­றங்­களே ( மேக்ரோ அளவில்) இனி நம் சந்­தையை அடுத்த நிலைக்கு எடுத்து செல்ல முடியும். பிற நாடு­க­ளோடு ஒப்­பி­டும்­போது, இந்­தியா ஓர் உற்­பத்தி நாடாக தன்னை நிலைப்­ப­டுத்திக் கொள்ள வேண்டும். சந்­தையின் அவ­சரப் போக்­கிற்கு பொரு­ளா­தாரம் ஈடு கொடுக்­காது. ஆகவே, சந்தை தன்னை நிலைப்­ப­டுத்திக் கொள்ள வேண்­டி­யது அவ­சியம்.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)