பதிவு செய்த நாள்
28 மே2017
06:06

புதுடில்லி : அசஹி இந்தியா கிளாஸ் நிறுவனம், குஜராத்தில் புதிய ஆலை ஒன்றை அமைக்க உள்ளது. குஜராத்தில் உள்ள ஹன்சால்புரில், ஜப்பானை சேர்ந்த, சுசூகி நிறுவனம் அமைத்துள்ள, புதிய கார் தொழிற்சாலைக்கு தேவைப்படும் வாகன கண்ணாடிகளை தயாரிக்கும் நோக்கத்துடன் இந்த ஆலையை அமைக்கிறது, அசஹி இந்தியா நிறுவனம். இந்த ஆலைக்காக, 500 கோடி ரூபாயை முதலீடு செய்கிறது இந்நிறுவனம். இந்த முதலீடு இரு கட்டங்களாக செய்யப்பட உள்ளது.இது குறித்து, இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான, சஞ்சய் லாப்ரோ கூறியதாவது:முதல்கட்டமாக, இந்த ஆலை ஆண்டுக்கு, 10 லட்சம் லேமினேட்டட் கண்ணாடிகளையும், 1 லட்சத்து 20 ஆயிரம் டெம்பர்டு கண்ணாடிகளையும் தயாரிக்கும் திறன் கொண்டதாக அமைக்கப்படும்.அடுத்த கட்டமாக, இந்தியா முழுக்க இருக்கும் வாடிக்கையாளர்களுக்காக கண்ணாடிகள் சப்ளை செய்யப்படும். மேலும், மதிப்புக் கூட்டப்பட்ட கண்ணாடி வகைகளும் தயாரிக்கப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|