பதிவு செய்த நாள்
28 மே2017
06:11

புதுடில்லி : ‘தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள், ஜி.எஸ்.டி.,யால் பெறும் கூடுதல் பயன்களை நுகர்வோருக்கு வழங்கிடும் நோக்கில், மொபைல்போன் சேவை கட்டணத்தை குறைக்க வேண்டும்’ என, மத்திய நிதியமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.வரும், ஜூலை 1 முதல், நாடு முழுவதும் ஒரே சீரான, ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அமலுக்கு வர உள்ளது.தற்போது, தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள், நுகர்வோரிடம், 14 சதவீதம் சேவை வரி மற்றும், ‘ஸ்வச் பாரத், கிரிஷி கல்யாண்’ஆகிய திட்டங்களுக்காக தலா, 5 சதவீதம் கூடுதல் வரி வசூலிக்கின்றன.திரும்ப பெறலாம்சரக்கு மற்றும் சேவை வரியில், தொலைத்தொடர்பு சேவைக்கு, 18 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.எனினும், இதில், மூலப் பொருட்களுக்கு செலுத்தப்பட்ட வரியை, நிறுவனங்கள் திரும்பப் பெற, வழி வகை செய்யப்பட்டுள்ளது.இது குறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள், தற்போதைய நடைமுறையில், சரக்குகளுக்கு செலுத்தும், ‘வாட்’ எனப்படும் மதிப்பு கூட்டு வரியை திரும்பப் பெற முடியாது. இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு செலுத்திய சிறப்பு கூடுதல் வரியையும் திரும்பப் பெற வழியில்லை.ஆனால், ஜி.எஸ்.டி.,யில், தொலைத்தொடர்பு சேவைக்கு விதிக்கப்பட்டுள்ள, 18 சதவீத வரி என்பது, மதிப்பு கூட்டப்பட்ட வரியையும் உள்ளடக்கியது என்பதால், மூலப் பொருட்களுக்கு, நிறுவனங்கள் செலுத்திய வரியை திரும்பப் பெறும் வசதி உள்ளது.அத்தொகை, அவற்றின் விற்று முதலில், 2 சதவீத அளவிற்கு இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.கூடுதல் பயன்கள்மேலும், 2016ல், அகண்ட அலைவரிசை ஒதுக்கீட்டிற்கான சேவை வரியில், மூலப் பொருட்களுக்கான வரியை, தொலைத்தொடர்பு நிறுவனங்கள், மூன்று ஆண்டுகளில் திரும்பப் பெறும் வசதி தற்போது உள்ளது.ஆனால், ஜி.எஸ்.டி.,யில், மூலப் பொருட்களுக்கு செலுத்திய வரி முழுவதையும், அந்த நிதியாண்டிற்குள்ளாகவே நிறுவனங்கள் பெற வகை செய்யப்பட்டுள்ளது.இதனால், நடப்பு நிதியாண்டிலேயே, தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களுக்கு, அடுத்த இரண்டு ஆண்டுகளில் கிடைக்க வேண்டிய வரித் தொகை திரும்பக் கிடைத்து விடும்.இந்த வகையில், கடந்த நிதியாண்டில், தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் செலுத்திய வரியில், 87 சதவீதம் மட்டுமே, ஜி.எஸ்.டி.,யில் செலுத்த நேரிடும்.இத்தகைய பயன்களை கருத்தில் கொண்டு, கூடுதலாக கிடைக்கும் வரி ஆதாயத்தை, மொபைல்போன் சேவை கட்டணத்தை குறைப்பதன் மூலம்,தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள், நுகர்வோருக்கு வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஜி.எஸ்.டி.,யில், தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களுக்கு, 0.7 – 1 சதவீதம் தான் வரி ஆதாயம் கிடைக்கும். அரசு தவறாக மதிப்பீடு செய்துள்ளது.ஜி.எஸ்.டி.,யால், மொபைல்போன் சேவை கட்டணம் உயரும்ராஜன் மாத்யூஸ், டைரக்டர் ஜெனரல், இந்திய மொபைல்போன் சேவை நிறுவனங்கள் கூட்டமைப்பு
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|