மொபைல்போன் சேவை நிறுவனங்கள் கட்டணத்தை குறைக்க அரசு வலியுறுத்தல்  மொபைல்போன் சேவை நிறுவனங்கள் கட்டணத்தை குறைக்க அரசு வலியுறுத்தல் ... ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.64.57 ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.64.57 ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
கமா­டிட்டி சந்தை: முருகேஷ் குமார்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 மே
2017
05:00

கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய் விலை, கடந்த வாரம் ஆரம்ப நாட்­களில் உயர்ந்து காணப்­பட்­டது. கடந்த, 2016 நவம்­பரில் நடந்த கூட்­டத்தில், ஜன­வரி முதல் ஜூன் வரை, தினமும், 1.8 மில்­லியன் பேரல்கள் கச்சா எண்ணெய் உற்­பத்தி அள­வினை அமல்­ப­டுத்த முடிவு செய்­யப்­பட்­டது. அதன் விளை­வாக, கச்சா எண்ணெய் விலை, 26 டாலரில் இருந்து, 52 டால­ராக உயர்ந்­தது. இருப்­பினும், ஒபெக் நாடுகள் எதிர்­பார்த்த அள­விற்கு, விலை உய­ர­வில்லை. அதற்கு, ஆறு மாதங்­க­ளாக அமெ­ரிக்­காவின் எண்ணெய் உற்­பத்தி மிகவும் அதி­க­ரித்து, 9.2 மில்­லியன் பேரல் நிலையை அடைந்­தது தான் காரணம்.

கடந்த ஆண்டு, 316 ஆழ்­குழாய் கிண­றுகள் இயங்கி வந்த நிலையில், தற்­போது, அது, 697 ஆக உயர்ந்­துள்­ளது. இதனால், சந்­தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு கட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டது.இச்­சூ­ழலில், கடந்த வாரம் நடை­பெற்ற, ‘ஒபெக்’ கூட்­ட­மைப்பு நாடு­களின் கூட்­டத்தில், அதி­கப்­ப­டி­யான உற்­பத்தி குறைப்பு குறித்த அறி­விப்பு வரும் என, எதிர்­பார்ப்பு இருந்­தது. ஆனால், குறைப்பு அளவில் எந்த மாற்­றமும் இல்லை என அறி­விக்­கப்­பட்­டது. கச்சா எண்ணெய் உற்­பத்தி குறைப்பை, மேலும் ஒன்­பது மாதங்­க­ளுக்கு நீட்­டிக்க தீர்­மா­னிக்­கப்­பட்­டது. இதனால், சந்­தையில் கச்சா எண்ணெய் விலை, 6 சத­வீதம் குறைந்து, 49.5 டால­ராக வர்த்­தகம் முடி­வ­டைந்­தது. வரும் நாட்­களில், கச்சா எண்ணெய் விலை, 46.80 டாலர் முதல், 51.50 டாலர் வரை வர்த்­தகம் ஆகும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

பொருள் வணிக முன்­பேர சந்­தையின் அள­வுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) (ஜூன்) 31.80 30.50 32.45 33.05என்.ஒய்.எம்.இ.எக்ஸ். (டாலர்) 48.10 46.80 50.30 51.50

தங்கம், வெள்ளி
பொருள் வாணிப சந்­தையில் தங்கம் மற்றும் வெள்­ளியின் விலை, தொடர்ந்து மூன்­றா­வது வார­மாக உயர்ந்த நிலையில் முடி­வ­டைந்­தது. சர்­வ­தேச சந்­தையில் ஏற்­பட்ட மாற்றம் இந்­திய சந்­தை­யிலும் பிர­தி­ப­லித்­தது.

மே 2 – 3ல் நடை­பெற்ற, பெடரல் ரிசர்வ் வங்­கியின் கூட்­டத்தில் எடுக்­கப்­பட்ட தீர்­மா­னத்தின் அறிக்கை, கடந்த புதன்­கி­ழமை வெளி­வந்­தது. அதில், அமெ­ரிக்க பொரு­ளா­தார வளர்ச்சி ஜன., – மார்ச் வரை­யி­லான, முதல் காலாண்டில், 0.7 சத­வீதம் என, தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. இத்­துடன், அமெ­ரிக்க அர­சி­யலில் எழுந்­துள்ள குழப்­பங்­களும், அதி­பரின் கொள்கை மீதான சர்ச்­சை­களும், அமெ­ரிக்க நாண­யத்தின் மதிப்பு குறைய காரணம் ஆகி­ன. இதனால், சந்­தையில், தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்ந்து காணப்­பட்­டது. ஆப­ரண சந்­தையில், சீனாவின் இறக்­கு­மதி, கடந்த மாதம், 33.5 சத­வீதம் குறைந்­துள்­ளது.

ஜி – 7 நாடு­களின் கலந்­தாய்வு, 26 – 27 தேதி­களில், இத்­தா­லியில் உள்ள சிசிலி தீவில் நடை­பெற்­றது. இவ்­வா­றான அசா­தா­ரண சூழல் கார­ண­மாக, தங்கம் மற்றும் வெள்ளி விலை சிறிது உயர்ந்து வர்த்­த­க­மா­னது. வரும் நாட்­களில், தங்­கத்தின் ரெசிஸ்டன்ட், 1,295 டாலர் ஆகும். வியா­பார நிலை­யா­னது, 1,250 முதல் 1,280 டாலர் வரை இருக்கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. வெள்ளி, 16.80 டாலர் முதல் 18 டாலர் வரை வியா­பாரம் ஆகும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

தங்கம்
பொருள் வணிக முன்­பேர சந்­தையின் அள­வுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) (ஜூன்) 28,580 28,350 29,020 29,200காம்எக்ஸ் (டாலர்) 1255 1243 1278 1296

வெள்ளி
பொருள் வணிக முன்­பேர சந்­தையின் அள­வுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) (ஜூலை) 39,450 38,900 40,490 41,000காம்எக்ஸ் (டாலர்) 16.80 15.50 17.90 18.50

செம்பு
பொருள் வாணி­பத்தில், கடந்த வாரம் செம்பின் விலை அதி­க­ரித்து வர்த்­த­க­மா­னது. எல்.எம்.இ., எனப்­படும் லண்டன் மெட்டல் எக்ஸ்­சேஞ்சில், உல­க­ளவில் தொழிற்­சாலை மூல­தனப் பொருட்­க­ளான இரும்பு, செம்பு, துத்­த­நாகம், கார்பன் போன்­றவை வர்த்­த­க­மா­கின்­றன. இந்­திய சந்­தையில் இவற்றின் வர்த்­தகம் நடை­பெ­று­கி­றது. செம்பின் விலை உயர்­வுக்கு, இந்­தோ­னே­ஷி­யாவின் கிராஸ்­பிரிக் சுரங்க தொழி­லாளர்கள் மேற்­கொண்­டுள்ள வேலை நிறுத்தம் மற்றும் உற்­பத்தி பாதிப்பு கார­ண­மாகும்.

உல­க­ளவில், இது ஒரு முதன்­மை­யான சுரங்கம் ஆகும். இங்கு, 900 தொழி­லா­ளர்கள் வேலை நிறுத்தப் போராட்­டத்தில் ஈடு­பட்­டுள்­ளனர். சீனாவின் பொரு­ளா­தார தொய்வு மற்றும் மூடிஸ் எனப்­படும், கிரெடிட் ரேட்டிங் ஏஜன்சி இதன் ரேட்­டிங்கை, ஏ – 1 ஆக குறைத்­தது. இதுவும், செம்பின் விலையில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்த உத­வி­யது.

பொருள் வணிக முன்­பேர சந்­தையின் அள­வுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 363.20 358 373 377

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)