பதிவு செய்த நாள்
29 மே2017
05:02

கடந்த வாரம், இந்திய பங்கு சந்தையில், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண், ‘நிப்டி’ மற்றும் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் ‘சென்செக்ஸ்’ ஆகியவை, வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டின.தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் மூன்றாம் ஆண்டு நிறைவு நாளில், சென்செக்ஸ் – 31 ஆயிரம் புள்ளிகளை கடந்தும், நிப்டி – 9,600 புள்ளிகளை கடந்தும் வர்த்தகமாயின. இதனுடன் அனைத்து துறை சார்ந்த, அதாவது மிட்கேப், ஸ்மால்கேப் குறியீடுகளும் உச்சத்தை அடைந்தன.
இவ்வளர்ச்சி, வரும் நாட்களிலும் நீடிக்கும் என்பதில் ஐயமில்லை. இருப்பினும், இந்நிலையில், ஒரு கன்சாலிடேஷன் சந்தையாக அமைய வாய்ப்பு உள்ளது. ஏறக்குறைய அனைத்து நிறுவனங்களின் கடந்த நிதி ஆண்டின் நான்காம் நிதி அறிக்கைகள் வெளியாகிவிட்டன. அவை, பெரும்பாலும் சாதகமாக இருந்ததால், சந்தையின் வளர்ச்சி சாத்தியமானது. வரும், 31ம் தேதி இந்தியாவின் நான்காம் காலாண்டு, ஜி.டி.பி., வெளியாக உள்ளது. ஜி.டபிள்யு.ஏ., வளர்ச்சி 6.6 – 6.9 சதவீதம் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இதற்கு முந்தைய, மூன்றாம் காலாண்டில், 7 சதவீதம் ஆக இருந்தது, குறிப்பிடத்தக்கது. இம்மாதம் விற்பனையான, நான்கு மற்றும் இருசக்கர வாகனங்களின் விபரம், ஜூன் 1ல் வெளியாக உள்ளது. ஏப்ரல் மாதத்தில் வாகன விற்பனை, அதிக அளவில் இருந்தது. கார் விற்பனை, 16 சதவீதம் வளர்ச்சியும், இருசக்கர வாகனங்கள், 20 சதவீதம் வளர்ச்சியும் கண்டுள்ளன.
இந்நிலை, மே மாதமும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கனரக வாகனங்கள் விற்பனை மே மாதம் குறைந்திருக்கும் என, கணிப்பு நிலவுகிறது. தென்மேற்கு பருவ மழை, கேரளாவில் இவ்வாரம் தொடரும் என்ற கணிப்பு, சந்தையில் ஏற்ற இறக்கத்தை உண்டுபண்ணும். அமெரிக்காவில் புதிதாக வேலையில் சேர்க்கப்பட்டோர் பட்டியல், வரும் வெள்ளியன்று வெளிவர உள்ளது. இத்துடன், சர்வதேச சந்தை நிகழ்வுகளும், பங்குச் சந்தையில் மாற்றங்கள் நிகழ உதவும். அமெரிக்க, ஐரோப்பா பங்குச் சந்தைகளுக்கு இன்று விடுமுறையாகும். இவ்வாரம் தேசிய குறியீட்டு எண், ‘நிப்டி’க்கு 9,680 என்ற நிலை முக்கியமாகும். இதை கடந்தால், மீண்டும் உச்ச நிலை தொடரும்.
கவனிக்க வேண்டிய பங்குகள்ஹட்கோ பிரசம் சிமென்ட்ஸ் மாஸ்டெக்ஜி.எஸ்.எப்.சி., யு.ஆர்.எல்., லாகிஸ்டிக்ஸ்
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|