மொபைல்போன் சேவை நிறுவனங்கள் கட்டணத்தை குறைக்க அரசு வலியுறுத்தல்  மொபைல்போன் சேவை நிறுவனங்கள் கட்டணத்தை குறைக்க அரசு வலியுறுத்தல் ... ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.64.57 ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.64.57 ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பெரும்­பான்மை சிந்­த­னை­யி­லி­ருந்து விலகி முத­லீடு செய்யும் நேரம் இது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 மே
2017
05:03

முத­லீட்­டா­ளர்கள் பரஸ்­பர நிதி திட்­டங்­களில் தொடர்ந்து முத­லீடு செய்தால், சந்தை தொடர்ந்து ஏற்றம் காண்­பது இயற்கை.

எஸ்.ஐ.பி., மற்றும் ரொக்க முறையில் தொடர்ந்து உள்­நாட்டு முத­லீட்­டா­ளர்கள் சந்­தையில் முத­லீடு செய்து வரு­கின்­றனர். உள்­நாட்டு முத­லீட்­டா­ளர்­களின் உற்­சாக மிகையே, சந்தை தொடர் உயர்­வுக்கு முக்­கிய காரணம் என, சொல்­லலாம். இந்த போக்கின் தொடர் வினை­களை ஆராய்வோம்...

சந்­தையின் மதிப்பு மிகை­யாக இருந்­தாலும், பரஸ்­பர நிதி திட்­டங்கள் அந்த பணத்­திற்கு உட­ன­டி­யாக பங்­கு­களை வாங்­கி­விட வேண்டும். வந்து சேரும் பணத்தை, வைப்பில் கொண்டோ, காத்­தி­ருந்தோ முத­லீடு செய்ய, அந்த பங்கு திட்­டங்­களின் நிர்­வா­கி­க­ளுக்கு அனு­மதி இல்லை. அந்த திட்­டங்­களின் வரை­மு­றைகள் அப்­படி வகுக்­கப்­பட்­டுள்­ளன. சந்தை உயர் மதிப்­பீட்டை அடைந்தால், அந்த நேரத்தில் நிதா­னமும் கவ­னமும் கொள்ள வேண்­டிய பொறுப்பு யாரு­டை­யது என்ற கேள்வி எழும் நேரத்தில், பரஸ்­பர நிதி நிர்­வாகம் அதற்கு பொறுப்­பல்ல என்­பது மிகத் தெளிவு. நம் நாட்டு முத­லீட்டு திட்­டங்­களின் மிகப்­பெ­ரிய குறை­யாக இந்த குறிப்­பிட்ட வரை­முறை வெளிப்­ப­டு­கி­றது. அந்த திட்­டங்­களின் வடி­வ­மைப்பு அப்­படி இருப்­பதே இதற்கு மூல காரணம்.

நாம் பணத்தைக் கொடுத்தால், அவர்கள் சந்­தையின் மதிப்­புக்கு அப்­பாற்­பட்டு உட­ன­டி­யாக முத­லீடு செய்வர். ஆகவே, எப்­போது முத­லீடு செய்­யக்­கூ­டாது என்ற முடி­வுக்கு பொறுப்பு, முத­லீட்­டா­ளரை சார்ந்­தது. இதை முத­லீட்­டா­ளர்கள் நன்கு புரிந்து கொள்ளும் தருணம் இது. சந்­தையில், எந்த பங்­குகள் உயர்­ம­திப்­பீட்டை அடைந்து விட்­ட­னவோ, அவற்றை தவிர்க்கும் பொறுப்பு முத­லீட்­டா­ள­ருக்கு மட்­டுமே உண்டு. அந்த பொறுப்பை பிற­ரிடம் கொடுக்க முடி­யாது என்­பதை ஒவ்­வொரு முத­லீட்­டா­ளரும் தெளி­வாகப் புரிந்து கொள்ள வேண்டும். அதே­ச­மயம், சந்­தையில் சில பகு­திகள் கவ­ன­மற்றும், மலி­வா­கவும் இருப்­பது இயற்­கையே. ஒவ்­வொரு முறையும் சந்தை, உச்­சத்தை தொடும்­போதும், சந்­தையின் முழுக் கவ­னமும் குறிப்­பிட்ட சில துறை பங்­கு­களில் மட்­டுமே இருக்கும்.

அதே­ச­மயம், வேறு சில துறை­களின் பங்­குகள் சந்­தையால் ஒதுக்­கப்­பட்டு மலி­வாக விற்­பனை ஆகும். அந்த பங்­கு­ களை வாங்க யாரும் அறி­வு­றுத்­த­மாட்­டார்கள். குறு­கி­ய­ கால மாற்­றங்­களில் மட்­டுமே சந்­தையின் முழு நாட்­டமும் இருப்­பதே இதற்கு மூல காரணம்.

நீண்ட கால நோக்­கோடு முத­லீடு செய்யும் வெகு­ சி­லரே இந்த துறை பங்­கு­களை வாங்­குவர். அந்த முத­லீட்­டாளர் வட்டம் சந்­தையில் ஒரு சிறு­பான்­மையே ஆகும். இந்த சிறு­பான்மை வட்டம் மட்­டுமே ஒவ்­வொரு முறையும் மாற்றுச் சிந்­த­னையும், எதிர்­மறை முடி­வாற்­றலும் கொண்டு முத­லீடு செய்யும்.

சந்தை மேலும் உயர, உயர; ஒவ்­வொரு முத­லீட்­டா­ளரும் தன் முத­லீ­டு­களை காக்கும் வண்ணம் முடி­வெ­டுக்கும் பொறுப்பை ஏற்க வேண்டும். பெரும்­பான்மை சிந்­த­னையில் இருந்து விலகி, அந்த சிறு­பான்மை சார்ந்து சிந்­திக்கும் தருணம் இது. மாற்றி யோசிக்கும் முத­லீட்­டா­ளர்­களை அடை­யாளம் கண்டு, அவர்கள் சிந்­த­னையை புரிந்து கொள்­வது ஒரு புதிய புரி­த­லுக்கு வழி வகுக்கும்; அதற்­கான நேரம் இது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)