பதிவு செய்த நாள்
29 மே2017
05:06

ஓயாமல் வேலை செய்து கொண்டிருப்பதை விட, அளவோடு வேலை செய்து வாழ்க்கையை ரசிக்கும் வகையில், ஓய்வு நேரத்தை கைவசம் வைத்திருக்க வேண்டும் என்கிறார் டிம் பெரிஸ். இதற்கான வழிகளை, ‘தி போர் ஹவர் ஒர்க்வீக்’ புத்தகத்தில் அவர் விவரிக்கிறார்:
ஓய்வு பெறுதல் என்பது ஆயுள் காப்பீடு போல பார்க்கப்பட வேண்டும். எதிர்பாராத மோசமான நிலைக்கான பாதுகாப்பாக மட்டுமே அது இருக்க வேண்டும். ஓய்வுபெறுதலை ஒரு இலக்காக கொள்வதன் மூலம், இதுவரை செய்து வருவதை விரும்பவில்லை என ஒப்புக்கொள்வது போல் ஆகிறது. பெரும்பாலானோரால் ஓய்வு பெற்ற பின், அதே தரத்தில் வாழ முடியாது. ஓய்வு காலத்திற்கு திட்டமிடலாம். ஆனால், அதுவே இலக்காக இருக்க முடியாது. தினமும், 24 மணி நேரம் வேலை செய்தால், 10 ஆண்டுகளில், பத்து கோடி கிடைக்கும் என்றால் அந்த வேலையை யாரேனும் விரும்புவார்களா? அதை தொடர்ந்து செய்ய முடியாது எனத்தெரியும். வேலை, ஓய்வு ஆகிய இரண்டும் தேவை. நன்றாக வேலை செய்துவிட்டு, இடையே உற்சாகமாக ஓய்வு எடுத்து கொள்ளலாம்.
குறைவாக செய்வது என்பது சோம்பல் அல்ல. அர்த்தமில்லாத செயல்களை குறைத்துக் கொண்டு வாழ்க்கை இலக்குகளுக்கு நெருக்கமானவற்றை செய்ய வேண்டும். பிசியாக இருப்பதை விட செயல்திறனோடு இருப்பதே முக்கியம்.எதையும் செய்ய சரியான நேரம் என்று ஒன்று கிடையாது. விரும்பியதை உடனே செய்யுங்கள். விரும்பியதை செய்ய ஏற்ற நேரம் வரும் என, காத்திருக்க வேண்டாம். சாதக பாதக அம்சங்களை யோசித்துக் கொண்டிருக்காமல் செய்ய வேண்டியவற்றை செய்தால் போதும். பெரும்பாலானோர் ஏதேனும் சில விஷயங்களில் சிறந்து விளங்குவர். ஆனால், பல விஷயங்களில் மோசமாக இருப்பர். பலவீனங்கள் பற்றி கவலைப்படுவதை விட்டு, உங்களிடம் உள்ள சிறந்த விஷயங்களில் கவனம் செலுத்துங்கள்.
பலவீனங்களை சரி செய்வதைவிட பலமாக உள்ளவற்றில் கவனம் செலுத்துவதே சிறந்தது. எதுவுமே மிகையாக இருந்தால் அதன் இயல்பு தலைகீழாக மாறிவிடும். ஓய்வு நேரமும் அப்படி தான். ஓய்வு நேரத்தை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். அது நஞ்சாக மாறிவிடக்கூடாது. பணம் ஒன்று மட்டுமே தீர்வல்ல. இன்னும் அதிக பணம் இருந்தால் எனும் மனநிலை சரியானது அல்ல. பணத்தை ஒரு சாக்காக வைத்துக் கொண்டு, வாழ்நாள் முழுவதும் வீணடிக்கவே இது வழிவகுக்கும். பணம் மட்டுமே குறிக்கோள் அல்ல.
எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை விட, அதை சம்பாதிக்க எவ்வளவு நேரம் வேலை செய்ய வேண்டியிருக்கிறது என்பதும் முக்கியம். இலக்குகளை நிறைவேற்றக்கூடிய அளவு பணம் போதுமானது.பலவீனமாக, நம்பிக்கை இல்லாமல், விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் இருப்பதை விட, செய்வதை விரும்பி உற்சாகமாக செய்வது முக்கியம். இதுவே முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|