பதிவு செய்த நாள்
29 மே2017
05:07

ஓய்வுகால நிதி இடைவெளி இந்தியா உள்ளிட்ட நாடுகளில் அதிகரிக்க இருப்பதாக உலக பொருளாதார அமைப்பு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
ஒவ்வொரு நாட்டிலும், ஓய்வு பெற்றவர்களுக்கு, அவர்களின் ஊதியத்தில், 70 சதவீத தொகையை அளிக்க தேவைப்படும் நிதி, ஓய்வுகால சேமிப்பு இடைவெளி என குறிப்பிடப்படுகிறது. அரசு வழங்கும் நிதி, நிறுவனங்கள் நிதி மற்றும் தனிநபர் சேமிப்பு ஆகியவை இந்த நிதியில் அடங்கும்.ஓய்வுகால நிதி தொடர்பாக உலக பொருளாதார அமைப்பு நடத்திய ஆய்வு, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் இந்த நிதிக்கான தேவை, 7 மற்றும் 10 சதவீதம் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாழ்நாள் ஆயுள் அதிகரிப்பு, சேமிப்பு குறைவு ஆகியவை இதற்கான காரணங்களாக அறியப்படுகின்றன.
2050ம் ஆண்டு வாக்கில் இந்தியாவில் ஓய்வுகால சேமிப்பு இடைவெளி நிதிக்கான தேவை 85 லட்சம் கோடி டாலராக அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என, கருதும் இந்த அமைப்பு, பென்ஷன் வசதியை மேம்படுத்துவதில் அரசுகள் கவனம் செலுத்த வேண்டும் என்றும், தனிநபர்கள் சேமிப்பை அதிகரிப்பதில் அக்கறை காட்ட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|